Posts

Showing posts from July, 2014

பாபு மற்றும் ரவி

அன்று காலை மணி 7.00.சென்னையின் சேரி பகுதி.ஓரு மூலையில் இருந்த குடிசை.உள்ளிருந்து எழுந்து வந்தான் பாபு.இன்னும் தூக்கம் முழுவதுமாக களையவில்லை. "எவண்டா இந்த ஸ்கூல கண்டுபுடிச்சது.பெரிய தொல்லையா இருக்கு"  என எல்லா சிறுவர்களையும் போல முணுமுணுத்து விட்டு குளிக்கச் சென்றான்.குளித்தவுடன் சூடாக இரண்டு இட்லி வைத்தார் அவன் அம்மா . "அம்மா பசிக்குது.இன்னும் ஒரே ஒரு இட்லி வைம்மா. "கண்ணா மாவு தீர்ந்து போச்சுடா.நாளைக்கு சாப்புடலாம் .செல்லமுல "என்றார் அம்மா. சாப்பிட்டு முடித்துவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான் பாபு.தினமும் நடந்துதான் போக வேண்டும்.அவனது தந்தையும் தாயும் கட்டிட வேலை செய்பவர்கள்.அதனால் வருமானம் மிக குறைவு.பாபு தன் அப்பாவிடம் பலமுறை சைக்கிள் வாங்கித் தர சொல்லி அழுதிருக்கிறான்.ம்ஹூம் .ஒன்றும் நடந்த பாடில்லை.அடுத்த வாரம் வாங்கி விடலாம் என சமாதானம் சொல்லி அனுப்பி வைப்பார்..மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பாபு.அவனுக்கு தோழர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை.அதனால் எப்போதுமே தனிமை தான்.தனிமை மட்டும் தான்.அந்த த