Posts

Showing posts from June, 2015

20 வயதில்

சிறுகதை :  காலை 7 மணிக்கு இங்கே தெருமுனையில் நின்று கொண்டிருக்கிறேன் . அதுவும்   அயர் பண்ணிய சட்டை , பேண்ட் அணிந்திருக்கிறேன் , உயர்தர வாசனைத் திரவம் பூசியிருக்கிறேன் . ஒரு மனிதன் காலை 7 மணிக்கு ஏன் இப்படி பகட்டாக நின்று கொண்டிருக்கிறான் . காரணம் இல்லாமலா . ஆனந்தி எங்கள் வீட்டின் அருகே   வசிக்க வந்து 6 மாதங்கள் ஆகிறது . இப்பொழுது இப்பக்கம் வருவாள் . காலையில் தண்ணீர் குடத்துடன் , நீர் இறைக்க இந்த வழி தான் தினம் செல்கிறாள் . அதனால் இங்கேயே தினம் தினம் காத்திருக்கிறேன் . அவள் அத்தனை அழகு கிடையாது . ஆனால் அழகாக இருக்கிறாள் . அவளைப் பார்க்கும் போதும் மட்டும் ஏதோ உற்சாகம் வந்துவிடுகிறது . உலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒன்றை , என்னால் பார்க்க முடிகிறதென்கிற ஆனந்தம் . எனக்கு சிகரெட் பிடிக்கும்  .  தினம் நான்கு பிடித்தாக வேண்டும்  .  ஆனால் இப்பொழுது நான் அதைத் தொடுவதில்லை . நான் சிகரெட் பிடிப்பதை அவள் பார்த்துவிட்டால்? பின் என்ன செய்வேன் ? என்னைக் கெட்டவன் என நினைத்துவிடுவாளே ? பிறகு என்னைப் பார்ப்பாளா ? அதனால் வேண்டாம் . போதும் . ஏன்  எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது . அவள் அப்

கணிதத்தின் கதை

Image
இரா நடராஜன் எழுதிய கணிதத்தின் கதை . கணிதத்தை மிக மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் தமிழின் ஒரே நூல் இது மட்டுமே . இன்று பள்ளிகளில் , அதுவும் முக்கியமாக கணிதப் பாடவேளைகளில் ஆசிரியர்கள் அடிக்கடி மாணவர்களை நோக்கிச் சொல்வது . ” இந்த கணக்கெல்லாம் உனக்கு வாழ்க்கையில் உபயோகப் படப்போகுதா . பித்தாகரஸ் தியரமும் , லேப்லாஸ் தியாரமும் எங்கும் பயன்படப்போவதில்லை . பள்ளிக்கூடம் எதுக்கு வர ? முதலில் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள் . கையைக் கட்டு . வாயைப் பொத்து ” இந்த கருத்தைத் தான் மிகப்பலாமக உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம் . கணிதம் என்பது நமது வாழ்க்கையில் அவசியமான , அத்தியாவசியமான ஒன்று . அது இல்லாமல் எதுவும் இல்லை . ஆம் .  கணிதம் இரத்தத்தைப் போல , காற்றைப் போல நம்மோடு கலந்திருக்கிறது. இந்நூலில் கணிதத்தின் வரலாறு மிகத் துள்ளியமாக பதிவு செய்யப் பட்டுள்ளது . எண்களின் தோன்றுதலில் இருந்து புத்தகம் தொடங்குகிறது . செவ்விந்தியர்கள் , பாபிலோனியர்கள் , மாயன்கள் , எகிப்தியர்கள் , கிரேக்கர்கள் , ரோம் மக்கள் என ஒவ்வொரு இனக்குழு மக்களும் , ஒவ்வொரு விதமான எண்களையும் , பொருள்களையும் எண்ணும் முறையையும்