Posts

Showing posts from November, 2015

சதுரங்கத்தின் வரலாறு

Image
நண்பர்கள் அனைவருக்கும் செஸ் விளையாடத் தெரியும் . மின்னல் வேகத்தில் நகர்த்தி எதிரில் உள்ளவரைத் திணறடிக்கத் தெரியும்.  ஆட்டத்தின் நுட்பமான விஷயங்கள் நன்றாகவே தெரியும் . ஆனால் செஸ் ஆட்டம் வளர்ந்து வந்த வரலாறு தெரியுமா? செஸ் ஆட்டத்தின் முன்னாள் ஜாம்பவான்களைப் பற்றி அறிவீர்களா ? உலகத்தில் நடந்த பிரபலமான செஸ் ஆட்டங்கள் பற்றி அறிந்ததுண்டா? இவை அனைத்தையுமே சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்கிறது ஆயிஷா நடராஜன் எழுதிய “ஒரு தோழனும் மூன்று 3 நண்பர்களும்” புத்தகம். இது சிறுவர்களுக்காக எழுதப் பட்ட சிறிய நாவல் தான். ஒரே கல்ப்பில் படித்து விடலாம். ஆனால் இது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. செஸ் ஆட்டம் மட்டுமல்லாது, பிரபலமான பல புத்தகங்கள் பற்றி, வரலாற்று நிகழ்வுகள் பற்றி என பிரம்மிக்க வைக்கிறது. ராகுல் ஜி என்ற சிறுவன் தான் கதையைச் சொல்கிறான். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் தான் கதைக்களம். அவனது குடும்பம் சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் செல்கிறது. அப்போது அவர்கள் மிலிட்டரி அங்க்கிள், மார்ட்டின் தாத்தா, சர்தார்ஜி என பல அறிவுஜீவி நபர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் கண்ணில் மெலிந்த ,ஏழ்மை நிலையில் ஒரு