Posts

பம்பரக் கட்டை

Image
வட்டத்தினுள் மட்டீர் மட்டீர் என்று குத்தி கட்டைகள் வெளியேறும் அந்தச் சத்தமும், கோஸ் கோஸ் என்று அத்தனை பேரும் ஆர்ப்பரிக்கும் ஓசையும் இன்னமும் துல்லியமாக் கேட்கிறது :) .பம்பரம் எப்போதுமே ஒரு சீசன் விளையாட்டாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது சாதாரண பள்ளி நாட்களிலோ, வார இறுதி விடுமுறைகளிலோ என ஓரிரு நாட்களுக்கு மட்டுமாக அதை நாங்கள் விளையாடியதே இல்லை. ஆண்டுத் தேர்வு விடுமுறைகளின் பகல் நேரங்கள் தான் எப்போதுமே இதற்குச் சரியானது. ஆனால் ஒரு முறை கூட பம்பரம் விளையாடுவோம் என எல்லோரும் ஒன்றுகூடி முடுவெடுத்தெல்லாம் ஆடியதே இல்லை. It happens. யாரவது ஒருவன் ஏதோ ஒரு யோசனையில் பம்பரம் ஒன்றை வாங்கி தெருவில் சுற்றிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்த இன்னொருவன் உடனே ”எங்கடா வாங்கினே”. கடையைக் கேட்டு விசாரித்து அவன் வாங்கி அவனும் பொழுதுபோகாமல் சுற்றுவான். இப்படியே ஒவ்வொருவராக வாங்கி எல்லோரும் ஆட்டத்தில் சேர மூன்று நாட்களாவது ஆகும். அது அப்படியே அந்த விடுமுறைக் காலம் முழுவதுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் அன்றைக்கு யாராவது குறி வைத்து செய்யப் படுவார்கள். அதெல்லாம் ரே...
இன்று திடீரென பள்ளிக் காலத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய காட்சி ஒன்று துல்லியமாக நினைவில் வந்துபோனது . அதன் பின் நாங்கள் சிறுவயதில் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டாக மனதில் ஓடவிட்டுப் பார்த்தேன். அட. எத்தனை அற்புதமான காலங்கள். சுரீரென்ற வெயிலையும் சீக்கிரம் வரச் சொல்லி வீட்டில் விழுகிற திட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆடிய கிரிக்கெட்டும் , பம்பரமும் , கோலியும் , எறிபந்தும், கிட்டியும் ,இரவில் மட்டுமே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கிற கப்பைஸும், மாய்ந்து மாய்ந்து திண்ணையில் அமர்ந்து பேசிய பேய்க் கதைகளும், அண்டர்டேக்கர் கதைகளும், வாய்க்காலில் விழுந்த பந்தை யாரெடுப்பது என்ற பிரச்சனையும், நாங்கள் தெருத் தெருவாக பின் தொடர்ந்து சென்ற கோயில் யானைகளும், ஜனவரி பிப்ரவரியும், ரஸ்லிங் கார்டும், எங்களிடைய இருந்த அஜித், விஜய் ரசிகர் குழுக்களும், அதன் சண்டைகளும் , அடேங்கப்பா. நினைத்துப் பார்க்கையில் பெருமூச்சை வரச் செய்கிறது. . இதில் நிறைய விளையாட்டுகள் தெருவில் எங்கள் தலைமுறையோடு வழக்கொழிந்து விட்ட சோகக் கதையும் நடக்கத்தான் செய்தது. பதினைந்து பேராவது இருந்திருப்போம். இன்றைக்கு மிகச் சில...

அரங்கம்

பாராவின் பொலிக பொலிக படித்ததிலிருந்தே திருவரங்கம் போய் ராமனுஜரைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.  இறுதியில் சென்றவாரம் அவ்வாசை நடந்தது. உண்மையில் எனக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் ராமானுஜரின் அந்த அர்ப்பணிப்பு தான் அவரை மிகவும் நேசிக்க வைத்தது. எப்படியான மனிதர். தனது முப்பதாவது வயதில் திருவரங்கத்திற்கு வந்ததிலிருந்து மரணித்த நூற்றியிருபதாவது வயது வரை அரங்கனை மட்டுமே நினைவில் கொண்டு அவருக்காகவே வாழ்ந்திருக்கிறார். அசுரத்தனமான பக்தி. முழுமையாக தன்னை அர்ப்பணித்தல் என்பது அதுதான்.   ஞாயிறு காலையில் நானும் நண்பன் மணியும் திருச்சி செல்லும் ரயிலைப் பிடித்தோம். எனக்கு ராமனுஜரை அறிமுகப் படுத்தியதே அவன் தான். ரயில் திண்டுக்கல் போய்ச்சேரும் வரை எந்தக் குழப்பமும் இல்லை. அங்கே போனவுடன் ரயிலை இரண்டாகப் பிரிப்ப்பார்கள். ஒரு பாதி ஈரோட்டுக்கும் இன்னொன்று திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கும். பிரச்சனை அதுவல்ல. எந்தப் பகுதி எங்கே போகுமென்பது எவருக்கும் உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் அதே ரயிலில் போனபோது பின் பகுதி ரயில் திருச்சிக்கு போனது. அத...

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

சரவணன் சந்தினின் “ஐந்து முதலைகளின் கதை” நாவலை போன வருடம் உயிர்மை விருதுகள் விழாவின் வாங்கினேன். அப்போது இந்த நாவல் தான் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருந்தது. ஆனால் ஏனோ அப்போது என்னால் படிக்க இயலவில்லை. 20 பக்கங்களுக்கு மேல் தாண்ட மாட்டேன் என்றது. சரியென்று கட்டுரைத் தொகுப்பு மாதிரி ஏதாவது ஒரு அத்தியாயத்தை எடுத்து நடு நடுவே வாசித்துப் பார்த்தேன். ம்ஹூம். ஒன்றும் நடக்கவில்லை. என்னுடைய வாசிப்பின் பிரச்சனையா, அல்லது அவருடைய மொழிநடையை  என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை . அதை அப்படியே மூடி வைத்து விட்டு அடுத்து வேறு நூல்களைப் படித்தேன்.  பல மாதங்களுக்கு பிறகு திடீரென புத்தக அலமாரியில் “ஐந்து முதலைகளின் கதை” தென்பட்டது. இப்போது படித்துப் பார்க்கலாம் என்று அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் “அட்டகாசம்” . அடித்து ஆடியிருக்கிறார் சரவணன் சந்திரன். ஒரே கல்ப்பில் படித்து முடித்துவிட்டேன். கட கடவென வழுக்கிக் கொண்டு போகிறது அவருடைய மொழிநடை. ஏன் இதை இத்தனை நாளாய் படிக்காமல் சும்மா இருந்தோம் என்று தான் தோன்றியது. இந்த நாவல் இவ்வளவு...

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவுகள்

நாம் தினம் தினம் காணுகிற,நம் பார்வைக்குத் தெரிகிற உலகம் வேறு, அதன் பின்னே கடினப் படுகிறவர்களின் ,போராடுகிறவர்களின்,புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களின் வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் மிக ஆழமாய் உணர்ந்தேன். பிறர் செய்த தவறுகளால் தன் இளமையை ,மகிழ்ச்சியை, வயதை,சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டேன். பிறர் யாருக்காக இல்லையென்றாலும் எனக்காக இதை நான் எழுதித் தான் ஆக வேண்டும். இதை இங்கு சொல்லித் தான் என் மனப் பிறழ்வை போக்கிக் கொள்ள முடியும். நேற்றைக்கு முந்தைய நாள் அலுவலகம் முடித்து நானும் என் நண்பன் ஒருவனும் மதுரையிலிருந்து விருதுநகருக்கு ரயிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். எங்கள் எதிரே இரண்டு கட்டைப் பை நிறைய பொருட்களுடன் துணிகளுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். முதல் பத்து நிமிடங்கள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த படிதான் வந்தார். மாலை குளிர் காற்றில் கைகளைக் கட்டிக் கொண்டே “இப்ப இருக்கிற குளிர எங்க தாங்க முடியுது. குளுரு அதிகமா இருக்குல” என்றார் மெதுவாக எங்களைப் பார்த்து...

சதுரங்கத்தின் வரலாறு

Image
நண்பர்கள் அனைவருக்கும் செஸ் விளையாடத் தெரியும் . மின்னல் வேகத்தில் நகர்த்தி எதிரில் உள்ளவரைத் திணறடிக்கத் தெரியும்.  ஆட்டத்தின் நுட்பமான விஷயங்கள் நன்றாகவே தெரியும் . ஆனால் செஸ் ஆட்டம் வளர்ந்து வந்த வரலாறு தெரியுமா? செஸ் ஆட்டத்தின் முன்னாள் ஜாம்பவான்களைப் பற்றி அறிவீர்களா ? உலகத்தில் நடந்த பிரபலமான செஸ் ஆட்டங்கள் பற்றி அறிந்ததுண்டா? இவை அனைத்தையுமே சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்கிறது ஆயிஷா நடராஜன் எழுதிய “ஒரு தோழனும் மூன்று 3 நண்பர்களும்” புத்தகம். இது சிறுவர்களுக்காக எழுதப் பட்ட சிறிய நாவல் தான். ஒரே கல்ப்பில் படித்து விடலாம். ஆனால் இது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது. செஸ் ஆட்டம் மட்டுமல்லாது, பிரபலமான பல புத்தகங்கள் பற்றி, வரலாற்று நிகழ்வுகள் பற்றி என பிரம்மிக்க வைக்கிறது. ராகுல் ஜி என்ற சிறுவன் தான் கதையைச் சொல்கிறான். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் தான் கதைக்களம். அவனது குடும்பம் சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் செல்கிறது. அப்போது அவர்கள் மிலிட்டரி அங்க்கிள், மார்ட்டின் தாத்தா, சர்தார்ஜி என பல அறிவுஜீவி நபர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் கண்ணில் மெலிந்த ,ஏழ்மை நிலையில் ...

என் இளமை நாட்கள்- ஜவஹர்லால் நேரு

Image
நேரு எழுதிய ”என் இளமை நாட்கள்” புத்தகம் படித்தேன். உண்மையில் அற்புதமானது. சத்திய சோதனை போலவே .ஆனால் இது அளவில் மிகச் சிறிய புத்தகம். காந்தியைப் போலவே எந்த இடத்திலும் நேரு தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதவில்லை. அதுபோல தன்னைப் பற்றிய செய்திகளையே அவர் அதிகம் எழுதவில்லை. தன் தந்தை மோதிலால் நேருவைப் பற்றி விரிவாக, அவரது அத்தனை குணங்களையும் சொல்லியிருக்கிற ார். சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் பற்றியும், வீரர்களில் மிதவாதிகளுக்கும ் தீவிரவாதிகளுக்க ும் இடையே இருந்த மன வேறுபாடுகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.நேருவ ின் தந்தை மோதிலால் நேரு முதலில் தீவிரவாதிகளின் மீது ஆர்வம் செலுத்தியிருக்க ிறார் , ஆனால் தீவிரவாதத்தின் மூலம் நீண்டகால பலன் எதுவும் கிடைக்காது என உணர்ந்து கொண்டவர் மிதவாதத்துக்கு ஆதரவாளரானார். ஜவகர்லால் நேரு பள்ளியிலும் கல்லூரியிலும் பாடப்புத்தகங்கள ை மட்டுமே படிக்கக் கூடியவராக இருக்கவில்லை. எப்போதுமே உலகில் நடக்கும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறா ர். தான் படித்த செய்திகளை நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறா ர். நேருவிற்க...