Posts

கைவிடப்படுதல்

Image
தேநீர் கடையில் அமர்ந்து கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவனுக்கு அருகில் ஒரு நிழல் விழுந்தது, தோள்களில் ஒரு கைபட்டதும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் நீண்ட மேலங்கி, அழுக்கடைந்த தாடி நெருப்பெரிகிற கண்கள் "இயேசு கிறுஸ்துவா ?" என்றான் ஆம் நானே தான், அப்படியென்ன உனக்கு நடந்துவிட்டது, ஒரு தேநீர் குடிக்கலாமா என்றார் கைவிடப்பட்டவர்களின் துயரம் உன்னைப் போன்ற கடவுள்களுக்கு தெரிந்துவிடப் போகிறதா என்ன என்னைக் கொஞ்சம் தனிமையில் விடுங்களேன் மெலிதாகச் சிரித்துக் கொண்ட இயேசு சொன்னார் கடவுளாவதற்கு முன்பு நானும் ஒரு மனித குமாரன் என்பதை மறந்துவிட்டாயா, நான் நேற்று தான் என் தேவனால் கைவிடப்பட்டேன், சிலுவையில் அறையப்பட்டேன், தாகமாயிருக்கிறதென பரிதவித்து அழுதேன், இன்றைக்கு நீ அழுகிறாய், நாளையும் பலர் அழப் போகிறார்கள் என் தோழனே, கைவிடப்படுதல் என்பது யுகங்கள்தோறும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது கைவிட்டப்பட்ட ஆயிரமாயிரம் கரங்கள் , காற்றில் தன் பிடிமானங்களை தேடி அலைகின்றன திரும்பவும் பற்றிக் கொள்ள கைகள் கிடைத்துவிடுமென பரிதவிக்கின்றன ஆனால் நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகிறதா என்ன ஆனாலும் எ...

FOMO

Image
தற்செயலாக அலுவலகத்தில் படித்தவொரு கட்டுரையால் இரண்டு வாரமாக ஃபேஸ்புக் பக்கமே வரவில்லை. FOMO என்பதைப் பற்றி அன்றைக்கு தான் கேள்வியே பட்டேன். அதன் பின்  பாட்ஷா ரஜினி மாதிரி "சொல்லுங்க சொல்லுங்க. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்திங்க" என்று என்னுடைய கடந்த காலத்தையெல்லாம் யோசிக்கிற போது நானும் முழு ஃபேஸ்புக் வாழ்நாளிலுமே இந்த FOMO சனியனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. நான் மட்டுமா என்ன. நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அட. நிச்சயம் பட்டிருப்பீர்கள். Fear Of Missing Out என்று விரித்துச் சொன்னால் புரியாமல் இருக்கப் போவதில்லை. அதாவது நம்முடைய ஃபேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ நம்முடன் நட்பில் இருப்பவர்கள் நிறைய பேர் நம்மைவிட மகிழ்ச்சியானவர்களாக புத்திக் கூர்மையுடையவர்களாக இருப்பதாகவும் நாம் அவர்களை விட பின் தங்கியிருப்பதாகவும் நினைத்து அடிக்கடி கையைப் பிசைந்து கொள்வோம். அவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க என்ன செய்வதென்று தெரியாமல் அடிக்கடி இங்கே ஏதாவது பதிவு செய்து கொண்டேயிருக்கிறோம். உதாரணமாக என் நண்பரொருவர் மழையில் நனைவதாகப் பதிவிடுகிறார் இதோ நானும் Feeling awesom...

வெள்ளை யானை - விமர்சனம்

Image
  சென்னை நகரை மெரீனாவின் மக்கள் கூட்டமாக, உயர்தர உணவகங்களாக, ஃபீனிக்ஸாக,அலுவலகத்தின் உயரமான ஏசி கட்டிடமாக , மென்பொருள் நிறுவனங்களாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு , இம்மாநகரம் இப்படியொரு பாதையை கடந்து வந்திருக்கிறதென்பது நம்ப முடியாததாகத் தானிருகிக்கிறது .  இந்தியாவில் ப்ரிட்டிஷ் ஆட்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் விளைவைக் காட்டுகிறது. இப்படி ஒரு வரியில் சொல்லி முடிக்கலாம் தான். ஆனால் ஜெயமோகன் காட்டும் சித்திரங்களும் காட்சிகளும் அனுபவங்களும் நம்மை நிலைகொள்ளாமல் அலையச் செய்பவை, மனதை உடைத்து நொறுக்குபவை. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை எத்தனை படித்து பார்த்துத் தீர்த்தாலும் நாமதில் என்றைக்குமே மூன்றாமவர்தான். உண்மையில் ஒடுக்கப்பட்டவனுக்கு மட்டும் தான் அந்த வலியை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். எய்டன் அப்படிப்பட்டவன் தான். எய்டன் ஒரு ப்ரிட்ட்ஷ் அதிகாரியாக சென்னையில் நியமிக்கப்பட்டவன். ஆனால் அவன் பெரும்பாலனோரைப் போல பிரிட்டனின் பிறந்தவன் இல்லை. அயர்லாந்த்தைச் சேர்ந்தவன். அங்கிருந்து காலணி நாடுகளின் அதிகாரிப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வந்தவன்.  தன்...

கற்பி

  இது ஒரு சுய தம்பட்டப் பதிவாக பார்க்கப் படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன் சமீபத்தில் இத்தனை மகிழ்ந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இத்தனை மகிழ்ச்சியான பொழுதை பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும் முடியவில்லையே, என்ன செய்வது :) இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஜிம் நண்பர் செல்வா அழைத்திருந்தார். நேரில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். கொரானா முடக்கத்தால் அவரை  வேலையிலிருந்து நிறுத்துவிட்டார்கள். கல்லூரியில் இயந்திரவியல் படித்தவர். அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் அதே துறையில் தான். ஊருக்கு வந்து போது முன்பு கணினியில் இருந்த ஆர்வம் காரணமாக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொஞ்சம் ஜாவாஸ்க்ரிப்டும் , பைத்தானும் படித்திருக்கிறார். அதை வைத்து வேலை தேட முயன்ற போது சில இடங்களில், நிரல்மொழி மட்டும் போதாது, எதாவது ஃப்ரேம்வொர்க் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கத் தான் எனக்கு ஃபோன் செய்திருக்கிறார். நான் நான்கு வருடங்களுக்கு முன் வேலைதேடும்போது, துறைக்கு புதியவர்களென்றால் எதாவது நிரல்மொழி தெரிந்திருப்பதே போ...

கோயில் குளந்தான் ஊருக்கு அழகு

Image
எங்கு பார்த்தாலும் கொட்டுச் சத்தம், அதற்கு முன் ஆடுகிற கூட்டம், காதைக் கிழிக்கும் கோஷங்கள். இப்படித் தான் இருந்திருக்க வேண்டிய ஊர். ஆனால் இன்றைக்கு எந்தச் சலனமுமின்றி பெருமூச்சுடன் ஊர் உறங்கிக் கிடக்கிறது. இதற்கு முன் இப்பங்குனித் திருநாள் காலத்தில் எங்களூர் இப்படித்தானிருந்ததா என நினைக்கிற போது மனம் நிலைகொள்ளவில்லை. பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறன்று பொங்கல் சாட்டுதலில் தொடங்கி ஊர் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கும். அன்றிலிருந்து ஊரில் ஒவ்வொருவருமே திருநாளை நோக்கி குதூகலித்துக் கிடப்பார்கள். மற்ற எந்தப் பண்டிகையையும் விட இப்பங்குனிப் பொங்கலையே கொண்டாடித் தீர்த்த மக்கள், இன்று வெறுமையுடன் வெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் நாள் தொடங்கி இருபத்தியோரு நாட்களுமே மொத்த ஊரும் கோயிலைச் சுற்றிச் சுழன்று கொண்டுதானிருக்கும். இப்பொங்கலை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென குதூகலித்துக் கிடக்கும் நாட்கள், இத்திருநாளை மட்டுமே நம்பி கடை விரித்துக் கனவு கொள்ளும் எத்தனை சாலையோர பொம்மை வியாபாரிகள், துணி விற்பவர்கள், பலூன் கடைக்காரர், சிறுவர்களைக் கவர அவர் ஊதிக் காட்...

டீ போடு ஸ்ட்ராங்கா டீ போடு

Image
ஏதோ டீ தினமாமே   :) சிறுவயதில் தாத்தாவுடன் காலை நடை செல்லும் போது, டீக்கடைக்கு அழைத்துச் செல்வார். அவர் பின்னே கொஞ்சம் ஒளிந்து கொண்டு காப்பி வேண்டுமெனக் கேட்டுக் குடிப்பேன். அக்கடையில் டீயுடன் சிகரெட்டை ஊதிக் கொண்டிருப்பவர்களெல்லாம் கெட்டவர்களன்றி வேறு யாராகவும் இருக்க முடியாதென எண்ணிக் கொண்டிருந்த காலம். இப்போதும் சிரிப்பாகத் தானிருக்கிறது . கல்லூரி முடித்து வேலையின்றி ஊரில் திரிந்து கொண்டிருந்த ஏதோவொரு சுபயோக தினத்தில், ஒரே நாளில் 3 முறை பேருந்து நிலையம் இறைவன் அருள் டீக்க டைக்கு அழைத்துச் சென்று ஆரம்பித்து வைத்தான் மணி. இன்றும் முடிந்த பாடில்லை.   :)   . காலையில் எழுந்தாகிவிட்டதா டீ, போராடிக்கிறதா டீ, வருத்தமா டீ, ரயிலுக்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கிறதா டீ, நண்பர்கள் சந்தித்திருக்கிறோமா டீ, இன்றைக்கு நாள் மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரி இருக்கிறாதா டீ, போன டீயைக் குடித்து ஒரு மணி நேரம் ஆகி விட்டதா , போடு அடுத்த டீயை. எந்தவொரு நாளும் டீயின்றிக் கழிந்ததில்லை. ஆனால் மேலே சொன்னாதெல்லம் வீட்டில் போடுகிற தேநீருக்குப் பொருந்தாது என்பதையறியவும்   :) ...

காந்தி காத்திருப்பார்

Image
எப்போதும் போன்றதொரு காந்தி ஜெயந்தி. கூடவே அவரைப் பற்றிய அவதூறுகளும் தென்படத் துவங்கிவிட்டன. வழக்கம் போல சுபாஷ் சந்திர போஸைப் பற்றிய பொய்யான மிகைப்படுத்தப்பட்ட ”நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?”பாணியிலான வரலாறுகள், அதையொட்டி காந்தியை இழிவு செய்து வசைபாடுவதென ஒவ்வொரு காந்தி ஜெயந்தியும் கடந்துபோகத் தான் செய்கிறது. ”போஸ் ஹிட்லரைப் பார்த்தார். தன் முதுகில் கை வைக்கும் தைரியம் ஹிட்லருக்கு மட்டுமே இருக்கிறதென்றார். முத்துராமலிங்கத் தேவர் தன் தளபதியென ஹிட்லரிடம் சொன்னார்” “போஸ் ஆங்கிலப் படையை துவம்சம் செய்தார். டெல்லியை நெருங்கினார். அவர் புகழ் பரவக் கூடாதென காந்தியால் சுதந்திரம் கிடைத்ததென பிரிட்டிஷ் அரசு அறிவித்தது “ “பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது காந்தி மௌனம் காத்தார்” “தன் தந்தை இறந்து கிடந்த போது தன் மனைவியுடன் காந்தி தனியறையில் உறவுகொண்டார்” “காந்தி ஒரு கோழை” “காந்தி ஒரு துரோகி” “காந்தி ஒரு காமுகன்” இத்தியாதி இத்தியாதிகள். நம் உண்மையான நோக்கம் தான் என்ன. போஸையும் பகத்சிங்கையும் உயர்த்துவதா அல்லது நம் அன்றாட தோல்விகளையும் கசப்புகளையும் மறைப்பதற்காக காந்தி...