Posts

கேள்வி எண் 17182

Image
 நான் பணிசெய்கிற மென்பொருள் துறையில் ,முக்கியமான வேலை செய்கிற ஆனாலும் பெரிதாக கண்டுகொள்ளப் படாத ஒரு சாரார் உண்டு. அவர்கள் டெஸ்டிங் குழுவைச் சேர்ந்தவர்கள். டெவலப்பர்கள் நிரல் எழுத, ஒவ்வொரு பகுதியாக அதை சோதனை செய்து கொண்டே இருப்பர் டெஸ்ட்டர்கள். இரு குழுவும் கிட்டத்தட்ட போரில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலத் தான் மனதளவில் எண்ணிக் கொள்வார்கள். கடினப்பட்டு மணிக்கணக்காக நிரல் எழுதி தான் உருவாக்கிய மென்பொருளில் , குறைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருக்கும்போது டெவலப்பருக்கு கோபம் உச்சத்தில் ஏறும்.  இருக்கிற பணியின் நடுவே அந்தக் குறைகளையும் சரிசெய்து ,அதன்பின் பாதியில் விட்ட பணியையும் தொடர்ந்து ப்ராஜக்டை முடிப்பதற்குள் தலைவலி தான். நாம் இவ்வளவு வேலை செய்கிறோமே, இவன் சுலபமாக குறை கண்டுபிடிக்கிறானே, இவனால் தான் ப்ராஜக்டே நகர மாட்டேன் என்கிறது என்று மனம் கொதிக்கும். குறை கண்டுபிடிப்பதெல்லாம் ஒரு வேலையா என்று தோன்றும். ஒருவேளை நம்மை தனிப்பட்டு பழிவாங்குகிறானோ என்று கூடத் தோன்றும்.  ஆனால் கொஞ்சம் விலகி நின்று பொறுமையாக யோசித்தால் புரியும் .  அந்தக் குறைகளையெல்லா...

சிறுதெய்வங்கள் வெறும் கற்கள்தானா ?

Image
  இது பெரும்பாலானோருக்கு நடந்திருக்கலாம். பதின் வயது முடிந்து இருபதுகளுக்குள் நுழைகிற காலம். ஒரு ஆவேசம் பொங்கும். என்னடா இது இத்தனை கடவுள்கள், தேவையற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள். இவர்களெல்லாம் என்றைக்குத் திருந்தி வாழப்போகிறார்களோ என்பது மாதிரி. முக்கியமாக சிறு தெய்வ ,மூதாதைய வழிபாடுகளின் போது தோன்றும் இந்த எண்ணம் மேலோங்கும். எங்கோயோ காட்டுக்குள்ளும் புதருக்குள்ளும் கடினப்பட்டு நடந்து ஒரு கல்லைக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்களே என ஒரு ஒவ்வாமை. அவர்களை மீட்டு நல்வழிப் படுத்த தோன்றியவன் நான் என நினைக்கிற ஒரு காலம். ஆனால் அதையெல்லாம் கடந்து, நாம் எவ்வளவு பிரம்மாண்ட ஒரு தொடர்ச்சிக்குள் இருக்கிறோமென்றும், வழிபாடுகளின் ஏன் தேவையென்றும் புரிந்து கொள்ள கொஞ்சம் காலமும் வாசிப்பும் தேவைப்பட்டிருக்கிறது. கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாம். மனித உருவாக்கம் என்பது ஒரு தொடர்ச்சியை உள்ளடக்கியது. உங்கள் வீட்டில் மாட்டியிருக்கிற தந்தை அல்லது பாட்டனின் புகைப்படத்திற்குப் பின்னால் எத்தனை ஆயிரம் முன்னோர் மறைந்திருப்பார்கள். அவர்கள் நமக்கு எத்தனை அளித்துச் சென்றிருப்பார்கள். அந்த தொடர்ச்சியை உதறி, நம் வேர்...

இன்சமாம் மற்றும் பிறர்

Image
  இன்று போல் எல்லாம் இல்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை தொடர்களில் வருடத்திற்கொரு முறை மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்கின்றன. ஆனால் இரு அணிகளும் சரளமாக மாறி மாறி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பயணித்து ஒருநாள், டெஸ்ட் தொடர்கள் ஆடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.   ஆச்சரியம் என்னவெனில் தொடக்கப்பள்ளியில் படிக்கிற வயதிருந்த எனக்கு தேசப்பற்றையெல்லாம்  தாண்டி ,அன்றைக்கு ஆடிய பாகிஸ்தான் அணியை ரொம்பவே பிடிக்கும். பாகிஸ்தானுக்கும், இந்தியா தவிர இன்னொரு அணிக்குமான ஆட்டமென்றால் ,சந்தேகமின்றி பாகிஸ்தான் பக்கமே மனது நின்றது. இந்தியாவுக்கு எதிரான சில ஆட்டங்களில் கூட பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். : ) கிரிக்கெட்டின் எந்த நுணுக்கமும் தெரியாத அந்த வயதில் ஏன் அப்படி அவர்களை பிடித்தது என யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணமும் பிடிபடவில்லை. வியப்பாகத்தானிருக்கிறது. ஹூம்.  இன்றைக்கும் பாகிஸ்தான் அணி கொஞ்சமும் பலமிழக்கவில்லை. அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு நாம் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த வீரர்கள் அந்த அணியில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள்....

உண்மையான காதல்

Image
இந்த வருடத்தில் படித்த முதல் புத்தகம். அராத்து எழுதிய உண்மையான காதல். ஒரே அமர்வில் படித்து முடிக்கக் கூடிய குறுநாவல். ஆனால் அது சொல்ல வருகிற விஷயங்கள் கொஞ்சம் சிக்கலானதும், அதே நேரத்தில் முக்கியமானாதும் கூட. காதல் தோல்வியால் வேதனையிலிருக்கிற ஒருவரை அவரது நண்பர்கள் சேர்ந்து தேற்றுகிற முயற்சியில் ஈசிஆரில் இருக்கிற ஒரு பங்களாவுக்குச் செல்கிறார்கள்(பார்ட்டிக்கு தான்). அங்கே நண்பர்கள் மத்தியில் நடக்கிற உரையாடல், ஒவ்வொருவரும் காதல் என்பதற்கு தாங்கள் நினைக்கிற விளக்கத்தையும் ,சில காதல் அனுபங்கள் மூலம் அவர்களுக்கு கிடைத்த புரிதல்களையும் சொல்லி விவாதிக்கிறார்கள். இறுதியில் கொஞ்சம் கலவையான மனவோட்டங்களுடன் தான் நாம் நாவலை படித்து முடிக்க முடிகிறது. ஆனால் நிஜத்தில், அது அப்படி மட்டுமே இருக்க முடியும். காதலைப் புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதில்லை என்பதுதான் நாம் அடைய வேண்டிய புரிதல். அந்தப் புரிதலை நோக்கித் தான் இந்த நாவலும் அதில் வருகிற ஒவ்வொரு உரையாடலும் நம்மை இட்டுச் செல்கிறது. முக்கியமாக அஸ்வத் கதாபாத்திரம். நண்பர் குழுவில் சீனியர். சில காதல்கள், அதன் பரவசங்கள் , திருமண முறிவு,விவாகரத்து என ...

என்ன செய்தேன் இவ்வருடம்

Image
  பணி உயர்வுடன் கூடிய நல்ல வேலை, நல்ல நிறுவனம் என மகிழ்ச்சியுடன் தொடங்கியது  ஆண்டு. அதில் முழுமையாக திளைப்பதற்குள் மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம் பனால். கொஞ்சமும் எதிர்பாராதா ஒரு பிரிவு . அதற்கு சற்றும் தயாராக இருந்திராத என்னை அது பிய்த்துப் போட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல், நேரம் அனைத்தையும் வருத்தப் படுவதற்கென்றே ஒதுக்கிவிட்டு வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள். கசப்பும், வெறுப்பும் ,வன்மமும் மனதில் நிறைந்து விட்ட நாட்கள்.   இன்றைக்கு நினைத்துப் பார்க்கிற போது எப்படி அதையெல்லாம் கடந்து வந்தேன் என ஆச்சரியமாகத்தானிருக்கிறது.  நாம் எத்தனை பூஞ்சையாக மாய உலகில் வாழ்ந்து என்றும் அதுதான் உணர்த்தியது .  ஆனால் இப்பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதிலிருந்து மீண்டு வர எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், இன்னும் வேகமாக அதற்குள் தள்ளியது. நதியில் அடித்துச் செல்லப்படுகிற சருகுபோல, வாழ்க்கைக்கு நம்மை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நிற்பதே அதற்கான தீர்வு என உணர்ந்து கொள்வதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஹூம் .என்னை நானே கொஞ்சம் மன்னித்துக் கொண்டேன், அவர்களையும். அச்சமயங்களில் ...

ஒரு Fan Boy ன் பிறந்தநாள் வாழ்த்து

Image
  கல்லூரி இறுதியாண்டில் தான் ,பாடத்துக்கு வெளியே தமிழில் கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். எழுத்தாளரைப் பற்றியெல்லாம் தெரிந்து புத்தகத்தை தேர்ந்தெடுக்கத் தெரியாது. ஆனால் கிழக்குப் பதிப்பகமென்றால் சிறிதும் யோசனையின்றி எடுத்துக் கொள்வேன். அதற்கு முன் சொக்கனை இடைவிடாது படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம் :) . குறிப்பாக வாழ்க்கை வரலாற்று நூல்கள். அப்படித்தான் திருச்சி கார்முகில் நிலையத்தில் ஒருநாள் ,ஹிட்லரின் படத்தோடு கூடிய கிழக்குப் பதிப்பக நூலை பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி கல்லூரி விடுதிக்கு வாங்கிக் கொண்டு போய் வாசிக்கத் தொடங்கினேன். வழக்கமான வாழ்க்கை வரலாறு போல் இதுவும் ஒன்று என படிக்க ஆரம்பித்தவனுக்கு எதிர்பாரத ஆச்சரியம். முதல் அத்தியாயமே ஹிட்லரின் மரணத்தில் தொடங்கியது. பிறந்த நாளன்று காலையில் எழுந்த ஹிட்லர் கொஞ்சம் கொஞ்சமாக அன்று மரணத்துக்காக தயாராவதைப் பற்றியது. அதுவரை நான் வாசித்திராத ஒரு மொழிநடை. அந்த உணர்வை  இன்றைக்குமே சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவு நேரம் போனது, சாப்பிட்டேனா இல்லையா எதுவும் தெரியவில்லை. முழு புத்தகத்தையும் வாசித்து முடித்த ...

கைவிடப்படுதல்

Image
தேநீர் கடையில் அமர்ந்து கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவனுக்கு அருகில் ஒரு நிழல் விழுந்தது, தோள்களில் ஒரு கைபட்டதும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் நீண்ட மேலங்கி, அழுக்கடைந்த தாடி நெருப்பெரிகிற கண்கள் "இயேசு கிறுஸ்துவா ?" என்றான் ஆம் நானே தான், அப்படியென்ன உனக்கு நடந்துவிட்டது, ஒரு தேநீர் குடிக்கலாமா என்றார் கைவிடப்பட்டவர்களின் துயரம் உன்னைப் போன்ற கடவுள்களுக்கு தெரிந்துவிடப் போகிறதா என்ன என்னைக் கொஞ்சம் தனிமையில் விடுங்களேன் மெலிதாகச் சிரித்துக் கொண்ட இயேசு சொன்னார் கடவுளாவதற்கு முன்பு நானும் ஒரு மனித குமாரன் என்பதை மறந்துவிட்டாயா, நான் நேற்று தான் என் தேவனால் கைவிடப்பட்டேன், சிலுவையில் அறையப்பட்டேன், தாகமாயிருக்கிறதென பரிதவித்து அழுதேன், இன்றைக்கு நீ அழுகிறாய், நாளையும் பலர் அழப் போகிறார்கள் என் தோழனே, கைவிடப்படுதல் என்பது யுகங்கள்தோறும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது கைவிட்டப்பட்ட ஆயிரமாயிரம் கரங்கள் , காற்றில் தன் பிடிமானங்களை தேடி அலைகின்றன திரும்பவும் பற்றிக் கொள்ள கைகள் கிடைத்துவிடுமென பரிதவிக்கின்றன ஆனால் நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகிறதா என்ன ஆனாலும் எ...