Posts

கணிதத்தின் கதை

Image
இரா நடராஜன் எழுதிய கணிதத்தின் கதை . கணிதத்தை மிக மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் தமிழின் ஒரே நூல் இது மட்டுமே . இன்று பள்ளிகளில் , அதுவும் முக்கியமாக கணிதப் பாடவேளைகளில் ஆசிரியர்கள் அடிக்கடி மாணவர்களை நோக்கிச் சொல்வது . ” இந்த கணக்கெல்லாம் உனக்கு வாழ்க்கையில் உபயோகப் படப்போகுதா . பித்தாகரஸ் தியரமும் , லேப்லாஸ் தியாரமும் எங்கும் பயன்படப்போவதில்லை . பள்ளிக்கூடம் எதுக்கு வர ? முதலில் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள் . கையைக் கட்டு . வாயைப் பொத்து ” இந்த கருத்தைத் தான் மிகப்பலாமக உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம் . கணிதம் என்பது நமது வாழ்க்கையில் அவசியமான , அத்தியாவசியமான ஒன்று . அது இல்லாமல் எதுவும் இல்லை . ஆம் .  கணிதம் இரத்தத்தைப் போல , காற்றைப் போல நம்மோடு கலந்திருக்கிறது. இந்நூலில் கணிதத்தின் வரலாறு மிகத் துள்ளியமாக பதிவு செய்யப் பட்டுள்ளது . எண்களின் தோன்றுதலில் இருந்து புத்தகம் தொடங்குகிறது . செவ்விந்தியர்கள் , பாபிலோனியர்கள் , மாயன்கள் , எகிப்தியர்கள் , கிரேக்கர்கள் , ரோம் மக்கள் என ஒவ்வொரு இனக்குழு மக்களும் , ஒவ்வொரு விதமான எண்களையும் , பொருள்களையும் எண்ணும் முறையை...

கலைஞர்

Image
சில நாட்களாய் கருணாநிதி என் நினைவுகளில் நடுவே மாபெரும்,ஆச்சரியமான மனிதனாய் பாய்ந்து கொண்டிருக்கிறார்.DARE TO FAIL என்ற புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் அந்த ஆச்சரியத்தை உணர்ந்தேன்.அது ஒரு தன்னம்பிக்கை புத்தகம்.எடிசன்,ஆபிரகாம் லிங்கன் என பல சாதனையாளர்களின் வாழ்வில் நிகழ்ந்த சவால்களையும்,இன்னல்களையும்,தோல்விகளையும் அவற்றை அவர்கள் எதிர்கொண்டு வென்றதைப் பற்றியும் எழுதப் பட்டிருந்தது. நடுவே ஒரு பக்கத்தில் கருணாநிதியின் படத்துடன் ஒரு கட்டுரை.ஆம்,அவரே தான்.படித்தேன்.வியந்தேன்.அந்த புத்தகத்தில் இருந்த ஒரு செய்தி.கருணாநிதி  பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்டது.அதை  பார்த்து சிறு அதிர்ச்சி அடைந்த போதும்,அந்தச் சீட்டை மடித்து சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்.அன்று பொதுக்கூட்டம் முடிந்த பிறகு வேகமாக வீட்டை நோக்கிச் சென்றார்.அப்பொழுது தான் மற்ற அனைவருக்கும் விஷயம் தெரிந்தது.அவர் மனைவி பத்மாவதி இறந்துவிட்டிருந்தார்.அந்தச் செய்தி தான் சீட்டில் எழுதப் பட்டிருந்தது.இதுவே அரசியலில் அவர் கொண்ட...
Image
சில வருடங்களாக அமேரிக்கர்கள் வியந்து கொண்டும் பாராட்டிக் கொண்டும் இருக்கும் பெயர் ”கே.ஆர்.ஸ்ரீதர்”.யார் இந்த ஸ்ரீதர்? என்ன செய்தார்? இவர் கண்டறிந்த ப்ளூம் எனெர்ஜி(Blomm Energy) என்னும் ஆற்றல் உலகையே இவர் பக்கம் திருப்பியுள்ளது. ”என்னய்யா இது! இந்த மின்சாரத்தைத் தயாரிக்க தான் இத்தனைப் பாடா? அணுசக்தியாம்,அனல்மின் நிலையமாம்,ஜெனெரேட்டராம்.இதனால் சுற்றுச் சூழலுக்கு எத்தனைப் பாதிப்பு தெரியுமா? ஒன்றும் செய்ய வேண்டாம்.என்னோடு வா.பெட்டியை எடு ,இணைப்பைக் கொடு,மின்சாரத்தைப் பெறு,முடிந்தது வேலை” இதுதான் இவரது சித்தாந்தம்.ஸ்ரீதர் திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில்(NIT) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.பின் மேற்படிப்பிற்காக அமேரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.அங்கு நியூக்லியர் டெக்னாலஜி துறையில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று அங்கிருந்து வெளியேறினார்.ஸ்ரீதர் செய்த சிறந்த ஆராய்ச்சிகளுக்காக நாசா அவரைத் தன்னுடைய ஆராய்ச்சியாளார் குழுவில் இணைத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ்(Aero space technologies)...

ஹிட்லர்

முகில் எழுதிய ஹிட்லர் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன்.  "என்னடா இது ?440 பக்கங்கள் என்று சொன்னார்களே ?இவ்வளவு விரைவில் படித்துவிட்டோமே .பலே அசோக் " என்ற பிரமிப்ப...

பாலர் பள்ளி

எனக்கு பாடங்களை நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு ."First impression is best impression ".ஆனால் நான் நினைப்பது " First school is best school". நான் படித்த அந்த முதல் பள்ளிக்க...

மகாத்மா

இன்று மதுரை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன் .தமுக்கம் மைதானத்தினுள் நுழைந்ததும் என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது.அனைத்து ஸ்டால்களிலும் நுழைந்து பார்த்தேன...

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

வணக்கம் , சில தினங்களுக்கு முன் நண்பர் சுந்தரின் உதவியால் பைபிள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பைபிள் .உலகத்தின் மிகப்பிரபலமான புத்தகம் தான்.ஆனால் அப்புத்தகத்தி...