Posts

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

முன்பு Steven Covey ன் புத்தகத்திலிருந்து paradigm shift என்ற   கருத்தைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதாவது நமக்குப் பிறர்  தீங்கு  ஏதும் செய்தாலோ, தொந்தரவு செய்தாலோ அவரை உடனே தண்டித்துவிடக் கூடாது. அவர்கள் எந்தத் தருணத்தில் அந்த தவறைச் செய்தார்கள், அவர்களுக்கு ஏன் அப்படி ஒருசூழல் ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும் . அவர்களை மன்னிக்க வேண்டும். இதைத் தான் ஸ்டீவன் கவே சொல்கிறார். இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்திலிருந்து உணர்ந்து எழுதியிருக்கிறார். அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் ஒரு கம்பராமாயணம் பாடலைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். ஸ்டீவன் கவே சொல்லியிருக்கும் அதே கருத்தை ,கம்பர் மிக அழகாக , உணர்ச்சியுடன் ராமாயணம் பாடல் ஒன்றில் சொல்லியிருக்கிறார்.  அதைப் படித்து வியந்து போனேன். அந்தப் பாடல் இதுதான் : ’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள் மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த! விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான் இந்தப் பாடல் நடக்கும் சூழல் என்னவென்றால் , தசரதனிடம...

20 வயதில்

சிறுகதை :  காலை 7 மணிக்கு இங்கே தெருமுனையில் நின்று கொண்டிருக்கிறேன் . அதுவும்   அயர் பண்ணிய சட்டை , பேண்ட் அணிந்திருக்கிறேன் , உயர்தர வாசனைத் திரவம் பூசியிருக்கிறேன் . ஒரு மனிதன் காலை 7 மணிக்கு ஏன் இப்படி பகட்டாக நின்று கொண்டிருக்கிறான் . காரணம் இல்லாமலா . ஆனந்தி எங்கள் வீட்டின் அருகே   வசிக்க வந்து 6 மாதங்கள் ஆகிறது . இப்பொழுது இப்பக்கம் வருவாள் . காலையில் தண்ணீர் குடத்துடன் , நீர் இறைக்க இந்த வழி தான் தினம் செல்கிறாள் . அதனால் இங்கேயே தினம் தினம் காத்திருக்கிறேன் . அவள் அத்தனை அழகு கிடையாது . ஆனால் அழகாக இருக்கிறாள் . அவளைப் பார்க்கும் போதும் மட்டும் ஏதோ உற்சாகம் வந்துவிடுகிறது . உலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒன்றை , என்னால் பார்க்க முடிகிறதென்கிற ஆனந்தம் . எனக்கு சிகரெட் பிடிக்கும்  .  தினம் நான்கு பிடித்தாக வேண்டும்  .  ஆனால் இப்பொழுது நான் அதைத் தொடுவதில்லை . நான் சிகரெட் பிடிப்பதை அவள் பார்த்துவிட்டால்? பின் என்ன செய்வேன் ? என்னைக் கெட்டவன் என நினைத்துவிடுவாளே ? பிறகு என்னைப் பார்ப்பாளா ? அதனால் வேண்டாம் . போதும் . ஏன்  எனக்க...

கணிதத்தின் கதை

Image
இரா நடராஜன் எழுதிய கணிதத்தின் கதை . கணிதத்தை மிக மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் தமிழின் ஒரே நூல் இது மட்டுமே . இன்று பள்ளிகளில் , அதுவும் முக்கியமாக கணிதப் பாடவேளைகளில் ஆசிரியர்கள் அடிக்கடி மாணவர்களை நோக்கிச் சொல்வது . ” இந்த கணக்கெல்லாம் உனக்கு வாழ்க்கையில் உபயோகப் படப்போகுதா . பித்தாகரஸ் தியரமும் , லேப்லாஸ் தியாரமும் எங்கும் பயன்படப்போவதில்லை . பள்ளிக்கூடம் எதுக்கு வர ? முதலில் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள் . கையைக் கட்டு . வாயைப் பொத்து ” இந்த கருத்தைத் தான் மிகப்பலாமக உடைத்தெறிகிறது இந்தப் புத்தகம் . கணிதம் என்பது நமது வாழ்க்கையில் அவசியமான , அத்தியாவசியமான ஒன்று . அது இல்லாமல் எதுவும் இல்லை . ஆம் .  கணிதம் இரத்தத்தைப் போல , காற்றைப் போல நம்மோடு கலந்திருக்கிறது. இந்நூலில் கணிதத்தின் வரலாறு மிகத் துள்ளியமாக பதிவு செய்யப் பட்டுள்ளது . எண்களின் தோன்றுதலில் இருந்து புத்தகம் தொடங்குகிறது . செவ்விந்தியர்கள் , பாபிலோனியர்கள் , மாயன்கள் , எகிப்தியர்கள் , கிரேக்கர்கள் , ரோம் மக்கள் என ஒவ்வொரு இனக்குழு மக்களும் , ஒவ்வொரு விதமான எண்களையும் , பொருள்களையும் எண்ணும் முறையை...