கலைஞர்
சில நாட்களாய் கருணாநிதி என் நினைவுகளில் நடுவே மாபெரும்,ஆச்சரியமான மனிதனாய் பாய்ந்து கொண்டிருக்கிறார்.DARE TO FAIL என்ற புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் அந்த ஆச்சரியத்தை உணர்ந்தேன்.அது ஒரு தன்னம்பிக்கை புத்தகம்.எடிசன்,ஆபிரகாம் லிங்கன் என பல சாதனையாளர்களின் வாழ்வில் நிகழ்ந்த சவால்களையும்,இன்னல்களையும்,தோல்விகளையும் அவற்றை அவர்கள் எதிர்கொண்டு வென்றதைப் பற்றியும் எழுதப் பட்டிருந்தது. நடுவே ஒரு பக்கத்தில் கருணாநிதியின் படத்துடன் ஒரு கட்டுரை.ஆம்,அவரே தான்.படித்தேன்.வியந்தேன்.அந்த புத்தகத்தில் இருந்த ஒரு செய்தி.கருணாநிதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுக்கப்பட்டது.அதை பார்த்து சிறு அதிர்ச்சி அடைந்த போதும்,அந்தச் சீட்டை மடித்து சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்.அன்று பொதுக்கூட்டம் முடிந்த பிறகு வேகமாக வீட்டை நோக்கிச் சென்றார்.அப்பொழுது தான் மற்ற அனைவருக்கும் விஷயம் தெரிந்தது.அவர் மனைவி பத்மாவதி இறந்துவிட்டிருந்தார்.அந்தச் செய்தி தான் சீட்டில் எழுதப் பட்டிருந்தது.இதுவே அரசியலில் அவர் கொண்ட...