Posts

Showing posts from August, 2014

மகாத்மா

இன்று மதுரை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன் .தமுக்கம் மைதானத்தினுள் நுழைந்ததும் என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது.அனைத்து ஸ்டால்களிலும் நுழைந்து பார்த்தேன் .சில புத்தகங்களை வாங்கினேன்,சிலவற்றின் முன்னுரையை மட்டும் படித்துவிட்டு அடுத்த வருடம் வாங்கி கொள்ளலாம் என நினைத்துக் கொண்டேன்.இறுதியாக ரூபாய் 500ல் 7 புத்தகங்கள்  வாங்கியாகிவிட்டது.அருகில்தான் காந்தி மியூசியம் உள்ளதென என்றோ ஒருநாள்  கேள்விப் பட்டிருக்கிறேன்.காந்தியைப் பற்றி அதிகம் படித்திருந்தாலும் நேரே சென்று பார்த்தது  வித்தியாசமாக இருந்தது.காந்திபங்குகொண்டபல  வரலாற்று நிகழ்வுகளின் புகைப்படங்களும் அங்கே  இருந்தன.கடைசியில் இருந்த ஓர் அறை.அதன் வாயிலில் இருந்த பலகை. "இந்த அறையில்  மகாத்மா  காந்தி உபயோகித்த பொருள்கள் உள்ளன" உள்ளே விரைந்தேன்.காந்தி பயன்படுத்திய கரண்டி,கண்ணாடி,படித்தபுத்தகங்களின் மாதிரி என பல பொருள்கள் இருந்தன.ஒர் மூலையில் இருந்த கண்ணாடி கூண்டினுள் ஒரு வேஷ்டி இருந்தது .அருகில் சென்றேன்.பலகையைப் பார்த்தேன் .ஆம்.காந்தியினுடையது தான்.அந்த மனிதர் சுடப்பட்ட போது அணிந்திருந்த அதே வேஷ்டிதான்.அப்பொழுது ஏற்பட்ட உணர்

இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

வணக்கம் , சில தினங்களுக்கு முன் நண்பர் சுந்தரின் உதவியால் பைபிள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பைபிள் .உலகத்தின் மிகப்பிரபலமான புத்தகம் தான்.ஆனால் அப்புத்தகத்தின் முதல் பக்கமே முழு பிழையாய் இருப்பதாக உணர்கிறேன். இதுதான் அந்த முதல் பக்கத்தின் சுருக்கம்தான் இது . "கடவுள் நிலம் உண்டாகட்டும் என்றார்,நிலம் உருவானது . கடல் உண்டாகட்டும் என்றார்,கடல் உருவானது. பகல்,இரவு உண்டாகட்டும் என்றார்,உருவாயின. உயிரினங்கள் உண்டாகட்டும் என்றார்,உயிரினங்கள் பிறந்தன ." இப்படியாக பல "ஆகட்டும்"களைக் கூறி முழு உலகையும் சில நொடிகளில் படைத்துவிட்டார்.ஆனால் இவைகளைப் படிக்கும்பொழுது குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதைகளை போலத்தான் தோன்றுகிறது . என்னுள் பல கேள்விகளும் எழுகிறது.இவ்வளவு பெரிய,அகண்ட,பிரம்மாண்டமான உலகம் எப்படி இப்போது உள்ளது போல் சகஜமான சூழலில் தோன்றியது?எப்படி இவற்றை கடவுளால் ஒரு நொடியில் உருவாக்க முடிந்தது?ஆதிமனிதர்களான ஆதாம்,ஏவாளால் பிறரிடமும் கடவுளிடமும் எப்படி உரையாட முடிந்தது?ஒரு நொடியில் அவர்களுக்கான மொழியை உருவாக்கிக் கொண்டார்களா?கொஞ்சம் பொறுங்கள்,இன்னொன்றும் இடிக்கிறதே ?