Posts

Showing posts from October, 2022

ஒரு Fan Boy ன் பிறந்தநாள் வாழ்த்து

Image
  கல்லூரி இறுதியாண்டில் தான் ,பாடத்துக்கு வெளியே தமிழில் கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். எழுத்தாளரைப் பற்றியெல்லாம் தெரிந்து புத்தகத்தை தேர்ந்தெடுக்கத் தெரியாது. ஆனால் கிழக்குப் பதிப்பகமென்றால் சிறிதும் யோசனையின்றி எடுத்துக் கொள்வேன். அதற்கு முன் சொக்கனை இடைவிடாது படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம் :) . குறிப்பாக வாழ்க்கை வரலாற்று நூல்கள். அப்படித்தான் திருச்சி கார்முகில் நிலையத்தில் ஒருநாள் ,ஹிட்லரின் படத்தோடு கூடிய கிழக்குப் பதிப்பக நூலை பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி கல்லூரி விடுதிக்கு வாங்கிக் கொண்டு போய் வாசிக்கத் தொடங்கினேன். வழக்கமான வாழ்க்கை வரலாறு போல் இதுவும் ஒன்று என படிக்க ஆரம்பித்தவனுக்கு எதிர்பாரத ஆச்சரியம். முதல் அத்தியாயமே ஹிட்லரின் மரணத்தில் தொடங்கியது. பிறந்த நாளன்று காலையில் எழுந்த ஹிட்லர் கொஞ்சம் கொஞ்சமாக அன்று மரணத்துக்காக தயாராவதைப் பற்றியது. அதுவரை நான் வாசித்திராத ஒரு மொழிநடை. அந்த உணர்வை  இன்றைக்குமே சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவு நேரம் போனது, சாப்பிட்டேனா இல்லையா எதுவும் தெரியவில்லை. முழு புத்தகத்தையும் வாசித்து முடித்த பிறகு தான