Posts

Showing posts from June, 2014

புயல் பெண்

இரவில் ஐந்து நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிட்டால் கூட நம் கண்கள் இருளில் பரிதவிக்கின்ன.இந்த பரிதவிப்பிற்கு காரணமானவரோ மின்தடை அடுத்த மாதம் நின்றுவிடும்,தமிழகம்  மின்மிகை மாநிலமாய் மாறும் என மேடைகளில் அறிக்கை விடுகிறார் .பாவம் அப்பாவி கிராம மக்கள் இந்த EX-நடிகையின் பேச்சை நம்பி வாக்களித்து முதலமைச்சராக்கி விட்டார்கள் .அய்யய்யோ!நான் சொல்ல வந்த டாப்பிக்கே மாறி போயிருச்சே .மன்னிக்கவும்.முன்பு கூறியதை ஒரு ரப்பர் எடுத்து அழித்துவிடுங்கள்.மறுபடியும் முதலில் இருந்து வருவோம் . இரவில் ஐந்து நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிட்டாலும் இருளில் பரிதவிக்கின்றோம்.கண்பார்வையற்றோர் வாழ்க்கை முழுதும் இந்த வேதனையை அனுபவிக்கின்றனர்.ஆனால் ஒருவரோ கண்பார்வை இல்லாமல் ,இரு காதுகளும் கேளாமல் மிகப்பெரும் அறிவு ஜீவியாய் விளங்கினார்.பல மேடைகளில் கண்ணீர் சிந்த பெண்களின் உரிமைக்காக வீர முழக்கமிட்டுள்ளார்.இதுவரை 54 புத்தகங்களை எழுதியுள்ளார்.கதைகளில் கூட இவரை போல ஒரு கதாபாத்திரத்தை காண  இயலாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவில் போராடியுள்ளார்.மாற்று திறனாளிகளின் கடவுளாய் இவர் திகழ்கிறார்.பொறுமை இழக்காதீர்கள்.அ

CIA என்னும் சல்லடை

CIA அமேரிக்க உளவுத்துறை புத்தகத்தை முடித்தாகிவிட்ட து ...அற்புதமான நடை ,அசாதாரணமான செயல்பாடு ...ஒவ்வொரு நாட்டையும் சல்லடை போட்டு செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறதுCIA .ஒரு அரசாங்க செய்தி நம் பிரதமரிடம் போவதற்கு முன் CIA மூலம் அமேரிக்க அதிபருக்கு போய்விடுகிறது.ஆ னால் எப்படி இது சாத்தியம் ? யோசித்தால் தலை பல ரவுண்டுகள் சுற்றுகிறது ..ஆனால் இதை சாத்தியமாக்கி அசாதாரணமாய் செய்து கொண்டிருக்கிறது CIA .அமேரிக்கஅரசின் பின் திரையில் என்னென்ன வேலைகள் நடக்கிறது என்பதை 70 mm ஸ்க்ரீன் வைத்து அழகாய் காட்டுகிறது இந்நூல் .உளவுத்துறை என்பது CIA வோடு நின்றுவிடவில்லை .ரஷ்யாவின் KGB,இஸ்ரேலின் மொஸாட் ,இந்தியாவின் CBI என நீண்டு கொண்டே போகிறது...அனைவர ும் படிக்க உங்களால் முடிந்த முயற்சிகளை எடுங்கள். . நன்றி -க.அசோக் ராஜ் 14/06/2014

படுஜோரு ஆஃபரு

இவர் ஒரு சாதனை கிழவர் . யார் இந்த முதியவர் என்று கேட்கிறீர்களா???.இவர் முதியவர் தான் .ஆனால் ஒரு நாயகன் .இவ்வளவு வயதான மனிதன் நாயகனா???ஆம்.இந ்திய கணினி துறையின் நாயகன் .WIPRO வின் நிறுவனர் அஸிம் ப்ரேம்ஜி .. நேற்று வீட்டிற்கு செல்லும் வழியில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஒரு விளம்பரப்பலகை தென்பட்டது .அது "கார்முகில் புத்தக நிலையம்".உள்ளே சென்றபோது மிகப்பெரிய ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன். நான் இவ்வளவு நாட்களாக படிக்க விரும்பிய அனைத்து புத்தகங்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஹிட்லர்,கார்ல் மார்க்ஸ் ,லெனின்,ஹென்றி ஃபோர்ட்,அஸிம் ப்ரேம்ஜி,இத்தியாதி என எத்தனையோ இருந்தன.அஸிம் ப்ரேம்ஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தும் இடத்திற்கு போனேன்.அதன் விலை 70ரூபாய்.அங்கிருந்த பெண்மணி கூறிய செய்தி இன்னொரு ஆச்சரியத்தில் சிறை வைத்தது.புத்தகத ்தை படித்துவிட்டு மறுபடியும் கடையில் கொடுத்தால் 63ரூபாய் திருப்பி வழங்கப்படும். அதாவது புத்தகத்தின் விலையில் 90% பணம் திருப்பி வழங்கப்படும்.வெறும் 7ரூபாய் செலவில் புத்தகத்தை படித்து விட்டேன்.

அமைதி பூங்கா

உங்களுக்கு ஸ்டீபன் கவே என்ற ஆங்கில எழுத்தாளரை தெரியுமா ?.உலகில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அவருடைய "7 habits of effective people " என்ற நூல் இடம்பெற்றுள்ளது. இருந்துட்டு போகட்டும்,அதை ஏம்ப்பா  இங்க சொல்றனு கேட்கிறீர்களா? அந்த நூலில் இருந்த ஒரு ஜோரான நிகழ்வை   இங்கே மொழிபெயர்க்க போகிறேன்.ஏனென்றால் ஆங்கிலம் தெரியாத சில  தமிழ் மக்களும்  அந்த புத்தகத்தின் உன்னதத்தை  அறிந்துகொள்ள வேண்டும். சரி சரி கதைக்குப் போகலாமா?ஆனால் இது கதையல்ல ஸ்டீபனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .அதற்கு முன் paradigm shift என்ற சொல்லை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் .அது என்னப்பா paradigm shift ..........maruthi swift போன்று இது ஒரு காரா ?அதுதான் இல்லை."நம் பார்வையை திருப்ப வேண்டும் ".எந்தப் பக்கம் திருப்ப வேண்டும் ?அதன் விடையை கதையின் நடுவே பார்த்து விடலாம் . Stephen covey யும் நம்ம ஊர் பெருசுகளைப் போல காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் ஓரு அமேரிக்க பெருசு.வழக்கம்போல நடைப்பயிற்சி முடிந்ததும் ஓர் இருக்கையில் அமர்ந்தார் ஸ்டீபன்.அப்போது அவர் கண்ட காட்சி....அடேங்கப்பா!மூன்று ச

விப்ரோவின் வளர்ச்சிக்கு காரணமான யானை

Image
சில நாட்களுக்கு முன் விப்ரோவின் நிறுவனர் அஸிம் ப்ரேம்ஜி பற்றி என்.சொக்கன் எழுதிய புத்தகத்தை படித்தேன்.அதில் வந்த ஒரு சம்பவம் எனக்கு நம்பிக்கையை தந்தது.அதே கதையை என் நடையில் எழுதும் முயற்சியில் தான் இப்பொழுது இறங்கி உள்ளேன்.ஆனால் நான் ஒன்றும் ஜே.கே.ரௌலிங் போல ஹேரிபார்ட்டர் எழுதும் தாதா அல்ல .இப்போது தான் பிறந்து எழுத்துத் துறையில் நடை பழகிக் கொண்டிருந்தது சிறு குழந்தை.அதனால் சற்று பல்லைக் கடித்துக் கொண்டு படித்து விடுங்கள் .சரி சரி வீணாக பேசிக் கொண்டிராது கதைக்கு வருவோம்.ஒரு ஊரில் ஒரு பையன் என்பது போல் பாட்டி கதை அல்ல இது .புளி சாதத்தை கட்டிக் கொண்டு குழந்தைகளுடன் கிளம்புங்கள்.நாம் போகவிருக்கும் இடம் மிருக காட்சி சாலை . அஸிம் ப்ரேம்ஜிக்கு ஊர் சுற்றுவதென்றால் கொள்ளை பிரியம்.சனி,ஞாய ிறு என்றில்லாமல் நேரம் கிடைக்கும் போது வெளியில் விசிட் அடித்து விடுவார்.அப்படி யான நேரத்தில் விப்ரோவின் அப்போதைய தலைவர் விவேக் பாலுடன் மிருக காட்சி சாலைக்குச் சென்றிருந்தார். வழக்கமான மிருக காட்சி சாலைகளை போலத்தான் இங்கும் குரங்குகளும்,மா ன்களும் ,மயில்களும் கூண்