Posts

Showing posts from December, 2021

FOMO

Image
தற்செயலாக அலுவலகத்தில் படித்தவொரு கட்டுரையால் இரண்டு வாரமாக ஃபேஸ்புக் பக்கமே வரவில்லை. FOMO என்பதைப் பற்றி அன்றைக்கு தான் கேள்வியே பட்டேன். அதன் பின்  பாட்ஷா ரஜினி மாதிரி "சொல்லுங்க சொல்லுங்க. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்திங்க" என்று என்னுடைய கடந்த காலத்தையெல்லாம் யோசிக்கிற போது நானும் முழு ஃபேஸ்புக் வாழ்நாளிலுமே இந்த FOMO சனியனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. நான் மட்டுமா என்ன. நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அட. நிச்சயம் பட்டிருப்பீர்கள். Fear Of Missing Out என்று விரித்துச் சொன்னால் புரியாமல் இருக்கப் போவதில்லை. அதாவது நம்முடைய ஃபேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ நம்முடன் நட்பில் இருப்பவர்கள் நிறைய பேர் நம்மைவிட மகிழ்ச்சியானவர்களாக புத்திக் கூர்மையுடையவர்களாக இருப்பதாகவும் நாம் அவர்களை விட பின் தங்கியிருப்பதாகவும் நினைத்து அடிக்கடி கையைப் பிசைந்து கொள்வோம். அவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க என்ன செய்வதென்று தெரியாமல் அடிக்கடி இங்கே ஏதாவது பதிவு செய்து கொண்டேயிருக்கிறோம். உதாரணமாக என் நண்பரொருவர் மழையில் நனைவதாகப் பதிவிடுகிறார் இதோ நானும் Feeling awesom

வெள்ளை யானை - விமர்சனம்

Image
  சென்னை நகரை மெரீனாவின் மக்கள் கூட்டமாக, உயர்தர உணவகங்களாக, ஃபீனிக்ஸாக,அலுவலகத்தின் உயரமான ஏசி கட்டிடமாக , மென்பொருள் நிறுவனங்களாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு , இம்மாநகரம் இப்படியொரு பாதையை கடந்து வந்திருக்கிறதென்பது நம்ப முடியாததாகத் தானிருகிக்கிறது .  இந்தியாவில் ப்ரிட்டிஷ் ஆட்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் விளைவைக் காட்டுகிறது. இப்படி ஒரு வரியில் சொல்லி முடிக்கலாம் தான். ஆனால் ஜெயமோகன் காட்டும் சித்திரங்களும் காட்சிகளும் அனுபவங்களும் நம்மை நிலைகொள்ளாமல் அலையச் செய்பவை, மனதை உடைத்து நொறுக்குபவை. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை எத்தனை படித்து பார்த்துத் தீர்த்தாலும் நாமதில் என்றைக்குமே மூன்றாமவர்தான். உண்மையில் ஒடுக்கப்பட்டவனுக்கு மட்டும் தான் அந்த வலியை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். எய்டன் அப்படிப்பட்டவன் தான். எய்டன் ஒரு ப்ரிட்ட்ஷ் அதிகாரியாக சென்னையில் நியமிக்கப்பட்டவன். ஆனால் அவன் பெரும்பாலனோரைப் போல பிரிட்டனின் பிறந்தவன் இல்லை. அயர்லாந்த்தைச் சேர்ந்தவன். அங்கிருந்து காலணி நாடுகளின் அதிகாரிப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை வந்தவன்.  தன் அயர்லாந்து நி