Posts

Showing posts from 2017

ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்

சரவணன் சந்தினின் “ஐந்து முதலைகளின் கதை” நாவலை போன வருடம் உயிர்மை விருதுகள் விழாவின் வாங்கினேன். அப்போது இந்த நாவல் தான் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருந்தது. ஆனால் ஏனோ அப்போது என்னால் படிக்க இயலவில்லை. 20 பக்கங்களுக்கு மேல் தாண்ட மாட்டேன் என்றது. சரியென்று கட்டுரைத் தொகுப்பு மாதிரி ஏதாவது ஒரு அத்தியாயத்தை எடுத்து நடு நடுவே வாசித்துப் பார்த்தேன். ம்ஹூம். ஒன்றும் நடக்கவில்லை. என்னுடைய வாசிப்பின் பிரச்சனையா, அல்லது அவருடைய மொழிநடையை  என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை . அதை அப்படியே மூடி வைத்து விட்டு அடுத்து வேறு நூல்களைப் படித்தேன்.  பல மாதங்களுக்கு பிறகு திடீரென புத்தக அலமாரியில் “ஐந்து முதலைகளின் கதை” தென்பட்டது. இப்போது படித்துப் பார்க்கலாம் என்று அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் “அட்டகாசம்” . அடித்து ஆடியிருக்கிறார் சரவணன் சந்திரன். ஒரே கல்ப்பில் படித்து முடித்துவிட்டேன். கட கடவென வழுக்கிக் கொண்டு போகிறது அவருடைய மொழிநடை. ஏன் இதை இத்தனை நாளாய் படிக்காமல் சும்மா இருந்தோம் என்று தான் தோன்றியது. இந்த நாவல் இவ்வளவு சுவாரஸ்ய

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவுகள்

நாம் தினம் தினம் காணுகிற,நம் பார்வைக்குத் தெரிகிற உலகம் வேறு, அதன் பின்னே கடினப் படுகிறவர்களின் ,போராடுகிறவர்களின்,புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களின் வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் மிக ஆழமாய் உணர்ந்தேன். பிறர் செய்த தவறுகளால் தன் இளமையை ,மகிழ்ச்சியை, வயதை,சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டேன். பிறர் யாருக்காக இல்லையென்றாலும் எனக்காக இதை நான் எழுதித் தான் ஆக வேண்டும். இதை இங்கு சொல்லித் தான் என் மனப் பிறழ்வை போக்கிக் கொள்ள முடியும். நேற்றைக்கு முந்தைய நாள் அலுவலகம் முடித்து நானும் என் நண்பன் ஒருவனும் மதுரையிலிருந்து விருதுநகருக்கு ரயிலில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். எங்கள் எதிரே இரண்டு கட்டைப் பை நிறைய பொருட்களுடன் துணிகளுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். முதல் பத்து நிமிடங்கள் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த படிதான் வந்தார். மாலை குளிர் காற்றில் கைகளைக் கட்டிக் கொண்டே “இப்ப இருக்கிற குளிர எங்க தாங்க முடியுது. குளுரு அதிகமா இருக்குல” என்றார் மெதுவாக எங்களைப் பார்த்து