Posts

Showing posts from September, 2015

என் இளமை நாட்கள்- ஜவஹர்லால் நேரு

Image
நேரு எழுதிய ”என் இளமை நாட்கள்” புத்தகம் படித்தேன். உண்மையில் அற்புதமானது. சத்திய சோதனை போலவே .ஆனால் இது அளவில் மிகச் சிறிய புத்தகம். காந்தியைப் போலவே எந்த இடத்திலும் நேரு தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதவில்லை. அதுபோல தன்னைப் பற்றிய செய்திகளையே அவர் அதிகம் எழுதவில்லை. தன் தந்தை மோதிலால் நேருவைப் பற்றி விரிவாக, அவரது அத்தனை குணங்களையும் சொல்லியிருக்கிற ார். சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம் பற்றியும், வீரர்களில் மிதவாதிகளுக்கும ் தீவிரவாதிகளுக்க ும் இடையே இருந்த மன வேறுபாடுகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.நேருவ ின் தந்தை மோதிலால் நேரு முதலில் தீவிரவாதிகளின் மீது ஆர்வம் செலுத்தியிருக்க ிறார் , ஆனால் தீவிரவாதத்தின் மூலம் நீண்டகால பலன் எதுவும் கிடைக்காது என உணர்ந்து கொண்டவர் மிதவாதத்துக்கு ஆதரவாளரானார். ஜவகர்லால் நேரு பள்ளியிலும் கல்லூரியிலும் பாடப்புத்தகங்கள ை மட்டுமே படிக்கக் கூடியவராக இருக்கவில்லை. எப்போதுமே உலகில் நடக்கும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு இருந்திருக்கிறா ர். தான் படித்த செய்திகளை நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்கிறா ர். நேருவிற்க

சந்திர பாபு - முகில்

Image
முகில் எழுதிய சந்திரபாபு "கண்ணீரும் புன்னகையும்" படித்தேன். இதை வாழ்க்கை வரலாறு என்று சொல்வதை விட,மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் புத்தகமாக் கொள்ளலாம். முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது , முகில் அவர்களின் எழுத்து நடை. அது சந்திரபாபுவின் வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிக அழுத்தத்துடன் நமக்குச் சொல்கிறது. சந்திரபாபு என்னை ரொம்பவே பாதித்துவிட்டார ்.இதைப் படிக்கும் முன்வரை , அவர் ஒரு காமெடி நடிகனாக மட்டுமே எனக்கு அறிமுகம்.ஆனால் அவர் செய்த நகைச்சுவைகளுக்க ுப் பின் உள்ள வலிகள் அதிகம் . உணவு இல்லாத நாட்கள் , உறக்கம் இல்லாத இரவுகள் அவர் வாழ்வில் ஏராளம். சந்திரபாபு எந்தத் தோல்விக்காகவும் தேங்கிவிட்டதே கிடையாது. "போனால் போகட்டும் போடா" எனச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைத் துவங்கிவிடுவார் . ஒருவரைப் பற்றி பிறரிடம் குறை பேச அவருக்குத் தெரியாது.ஏனெனில ் நேரடியாக அந்த நபரிடமே சென்று அதைச் சொல்லிவிடுவார் . அதுதான் சந்திரபாபு ஸ்டைல் . பொய் சொல்லத் தெரியாத சந்திரபாபு , எதிரியாக இருந்தாலும் , அவனுக்குத் திறமை இருந்தால் பாய்ந்து சென்று முத்தமிடும் சந்திரபாபு , நன்றி மறக்காத சந்திரபாபு,

ஆலன் டூரின் - கடித்த ஆப்பிள்

Image
இன்று ஆப்பிள் நிறுவனம் கடிக்கப்பட்ட ஆப்பிளை லோகோவாக(LOGO) கொண்டிருப்பதன் காரணம் இவர் தான் . இவர் பிரிட்டனைச் சேர்ந்த கணிதவியல் ஆராய்ச்சியாளர் ஆலன் டூரின் . ஆலன் கணினி பொறியியலிலும் மிகச்சிறந்து விளங்கியவர் . சென்ற நூற்றாண்டில் கணினிகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி செய்தவர்களுள் இவரும் ஒருவர் . இரண்டாம் உலகப்போரின் போது இவர் தான் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்ட தற்கு முக்கியக் காரணம் . ஜெர்மன் நாஜிப் படைகள் தங்களுக்குள் அனுப்பிக் கொண்டிருந்த செய்திகளை நடுவிலேயே வழிமறித்து , அதை DECODE செய்தார் ஆலன். ஆனால் DECODE செய்வதென்பது எளிதான வேலை அல்ல. அதற்கு மிகச்சிறந்த கணித , அறிவியல் அறிவு தேவை. ஆலனிடம் அது இயல்பாக இருந்தது. நாஜிக்களின் செய்தியை DECODE செய்ததன் மூலம் , அடுத்து பிரிட்டனின் எந்தப் பகுதியைத் தாக்குவதற்கு ஹிட்லர் திட்டமிடுகிறார் என்ற ரகசிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது . அதன்மூலம் பல பிரிட்டன் மக்களின் உயிரைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால் இத்தகைய சாதனை செய்த ஆலன் டூரினுக்கு வரலாறு வேறு விதமாக வாழ்க்கையை அமைத்து விட்டது. அப்போது பிரிட்டனில் ஓரினச்சேர்க்கைய ாளர

வேலை தேடுவோர் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களை நோக்கி மிகப் பெரிய கொள்ளை கும்பல் ஒன்று நகரத் தொடங்கியுள்ளது. வேலை இல்லாத இளைஞர்களின் துயரத்தை பயன்படுத்தி, அவர்களுடைய ஆசையைத் தூண்டி பணம் பறிக்கிறார்கள். எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அவர்கள் ஒரு Consultancy என்றார்கள். வேலைக்கு ஆள் எடுப்பதாகவும்,எந்த நேரமும் தங்கள் கன்சல்டன்சிக்கு இண்டர்வியூவிற்கு வரலாம் எனச் சொன்னார்கள். சரி என்று கிளம்பி போனேன். அந்த அலுவலகம் மிகச் சிறிய அறையில் இருந்தது. ஒரு அலுவலகம் போலவே இல்லை. அங்கே 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளை ... ஞர் மட்டுமே இருந்தார். வேறு எந்த பணியாளரையும் அங்கே காணவில்லை. அவர் இண்டர்வியூ நடத்தப் போவதாகச் சொன்னார். ஆனால் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் ரெஸ்யூமை மட்டும் பார்த்துவிட்டு, எங்கள் கன்சல்டன்சிக்கு உலகலாவிய நிறுவனங்களின் தொடர்பு உண்டு, நீங்கள் இப்போது ரெஜிஸ்ட்ரேசன் செய்தால் அத்தனை கம்பெனிகளும் உடனே நேர்முகத்தேர்வுக்கு அந்த நொடியே அழைக்கும் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்தார். அப்போதே புரிந்துவிட்டது. கடைசியாக ரெஜிஸ்ட்ரேசனுக்கும் 500 ரூபாய் கட்டுங்கள் என்றார். நல்ல வேலை அன்றைக்கு நான் அவ்வளவு பணம்

பசியோடு இரு

Image
” பசியோடு இரு; ஏமாற்றத்தோடு இரு” ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் இந்த நேரத்தில் அவர் சொல்லிய இந்த வரிகள் தான் என் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் ஜான் மெக்கின்ஸி. ஸ்டீவ் ஜாப்ஸின் நெருங்கிய நண்பன்.   புற்று நோய் காரணமாக நேற்றிரவு ஸ்டீவ் இறந்துவிட்டதாக கூறினார்கள். அவருடன் உரையாடியே நிறைய மாதங்கள் ஆகிவிட்டன. அவரின் கடைசி நேரத்தில் உடன் இருக்கமுடியவில்லை என்ற வேதனை என்னை பெரிதும் அழுத்துகிறது. என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது .கண்ணீர் வழிகிறது. இந்த துயரமான நேரத்தில் ஸ்டீவுடன் ஆப்பிளில் நான் பணியாற்றிய நாட்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  பல வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம். இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர்களை வடிவமைத்திருக்கிறோம். ஆனால் என்னால் ஸ்டீவை முழுதாகப் புரிந்து கொள்ளவே முடிந்ததில்லை. ஸ்டீவ் ஒரு புதிர். தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டு முன்னேற்றத்தைச் செய்து கொள்ளும் விடைதெரியாத புதிர். அதைப் பிறரால் புரிந்து கொள்ளவே முடியாது. கம்ப்யூட்டிங் துறையில் இத்தனை புரட்சி செய்து ,கம்ப்யூட்டரையும் செல்ஃ