வேலை தேடுவோர் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களை நோக்கி மிகப் பெரிய கொள்ளை கும்பல் ஒன்று நகரத் தொடங்கியுள்ளது. வேலை இல்லாத இளைஞர்களின் துயரத்தை பயன்படுத்தி, அவர்களுடைய ஆசையைத் தூண்டி பணம் பறிக்கிறார்கள்.

எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அவர்கள் ஒரு Consultancy என்றார்கள். வேலைக்கு ஆள் எடுப்பதாகவும்,எந்த நேரமும் தங்கள் கன்சல்டன்சிக்கு இண்டர்வியூவிற்கு வரலாம் எனச் சொன்னார்கள். சரி என்று கிளம்பி போனேன். அந்த அலுவலகம் மிகச் சிறிய அறையில் இருந்தது. ஒரு அலுவலகம் போலவே இல்லை. அங்கே 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளை...ஞர் மட்டுமே இருந்தார். வேறு எந்த பணியாளரையும் அங்கே காணவில்லை. அவர் இண்டர்வியூ நடத்தப் போவதாகச் சொன்னார். ஆனால் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் ரெஸ்யூமை மட்டும் பார்த்துவிட்டு, எங்கள் கன்சல்டன்சிக்கு உலகலாவிய நிறுவனங்களின் தொடர்பு உண்டு, நீங்கள் இப்போது ரெஜிஸ்ட்ரேசன் செய்தால் அத்தனை கம்பெனிகளும் உடனே நேர்முகத்தேர்வுக்கு அந்த நொடியே அழைக்கும் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்தார். அப்போதே புரிந்துவிட்டது. கடைசியாக ரெஜிஸ்ட்ரேசனுக்கும் 500 ரூபாய் கட்டுங்கள் என்றார். நல்ல வேலை அன்றைக்கு நான் அவ்வளவு பணம் அங்கே கொண்டு போகவில்லை. வீட்டிற்கு போய் எடுத்துவருகிறேன் எனச் சொல்லி தப்பித்துவிட்டேன்.

இன்னொரு சம்பவம் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்தது. ஒருவர் எனக்கு ஃபோன் செய்து ,உங்களை சாம்சங் நிறுவனத்திற்கு தேர்வு செய்துள்ளோம். சம்பளம் 18,000 ரூபாய். எந்த டெக்னிக்கல் தேர்வும் கிடையாது. ஆனால் ட்ரெய்னிங் பீரியடுக்காக 8000 ரூபாயை நான் சொல்லும் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுங்கள். உடனே வேலைக்கான கால் லெட்டரை அனுப்பிவிடுவோம் என்றார். ஏற்கனவே கட்டுரை எழுதவதற்காக இதைப் பற்றி Mugil Siva யோசனை சொன்னார். Sankareeswaran Alagarsamy யும் முன்பு ஒருமுறை தொடர்புகொண்டு தன் நண்பர் ஒருவர் இதுபோல ஏமாற்றப்பட்டதைச் சொன்னார். அதனால் இது ஏமாற்று வேலை என உடனே கண்டுபிடிக்க முடிந்தது. இருவருக்கும் என் அன்பும்,நன்றியும்.
வேலை தேடும் நண்பர்கள் அனைவரும் கவனமாக இருங்கள். JOB Portal களிலிருந்து நமது தகவல்களைத் திருடி இதுபோலச் செய்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற அழைப்புகள் வந்தால் தவிர்த்து விடுங்கள்.

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182