சந்திர பாபு - முகில்
முகில் எழுதிய சந்திரபாபு "கண்ணீரும் புன்னகையும்" படித்தேன். இதை வாழ்க்கை வரலாறு என்று சொல்வதை விட,மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் புத்தகமாக் கொள்ளலாம். முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது , முகில் அவர்களின் எழுத்து நடை. அது சந்திரபாபுவின் வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிக அழுத்தத்துடன் நமக்குச் சொல்கிறது. சந்திரபாபு என்னை ரொம்பவே பாதித்துவிட்டார ்.இதைப் படிக்கும் முன்வரை , அவர் ஒரு காமெடி நடிகனாக மட்டுமே எனக்கு அறிமுகம்.ஆனால் அவர் செய்த நகைச்சுவைகளுக்க ுப் பின் உள்ள வலிகள் அதிகம் . உணவு இல்லாத நாட்கள் , உறக்கம் இல்லாத இரவுகள் அவர் வாழ்வில் ஏராளம். சந்திரபாபு எந்தத்
தோல்விக்காகவும் தேங்கிவிட்டதே கிடையாது. "போனால் போகட்டும் போடா" எனச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைத் துவங்கிவிடுவார் . ஒருவரைப் பற்றி பிறரிடம் குறை பேச அவருக்குத் தெரியாது.ஏனெனில ் நேரடியாக அந்த நபரிடமே சென்று அதைச் சொல்லிவிடுவார் . அதுதான் சந்திரபாபு ஸ்டைல் . பொய் சொல்லத் தெரியாத சந்திரபாபு , எதிரியாக இருந்தாலும் , அவனுக்குத் திறமை இருந்தால் பாய்ந்து சென்று முத்தமிடும் சந்திரபாபு , நன்றி மறக்காத சந்திரபாபு, யாருக்காவும் கனவுகளை விட்டுத்தராத சந்திரபாபு , சிறிய விஷயமானாலும் மிகச் சிறப்பாக செய்து முடிக்கும் சந்திரபாபு , நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத சந்திரபாபு ,யாருக்கும் அஞ்சாத சந்திரபாபு . மொத்தத்தில் சினிமாவுக்காக வாழ்க்கை முழுவதும் உழைத்துவிட்டு , விளம்பரம் காட்டிக் கொள்ளாமல் நம்மைப் பிரிந்து விட்ட சந்திரபாபு. சந்திரபாபு இறந்தபோது , M.S.விஸ்வநாதனும ் , சிவாஜி கணேசனும் அழுத காட்சிகள் ரொம்பவே அழுத்தமானது . சந்திரபாபுவின் வாழ்க்கை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது. காணாமல் போன அந்தக் கலைஞனை , மிகக் கடினப்பட்டுச் சேகரித்து தொகுத்திருக்கிற ார் முகில் . இதில் ஆச்சரியம் , இது முகிலுடைய முதல் புத்தகம். ஆனால் படிக்கும்போது அப்படித் தோன்றவேயில்லை .இளைஞர் என்றாலும் ,அனுபவம் மிக்க எழுத்து அவருடையது .திரைப்படத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் மட்டுமல்ல , அனைவருமே அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
~அசோக் ராஜ்.
தோல்விக்காகவும்
~அசோக் ராஜ்.
Comments
Post a Comment