Posts

Showing posts from July, 2023

கேள்வி எண் 17182

Image
 நான் பணிசெய்கிற மென்பொருள் துறையில் ,முக்கியமான வேலை செய்கிற ஆனாலும் பெரிதாக கண்டுகொள்ளப் படாத ஒரு சாரார் உண்டு. அவர்கள் டெஸ்டிங் குழுவைச் சேர்ந்தவர்கள். டெவலப்பர்கள் நிரல் எழுத, ஒவ்வொரு பகுதியாக அதை சோதனை செய்து கொண்டே இருப்பர் டெஸ்ட்டர்கள். இரு குழுவும் கிட்டத்தட்ட போரில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலத் தான் மனதளவில் எண்ணிக் கொள்வார்கள். கடினப்பட்டு மணிக்கணக்காக நிரல் எழுதி தான் உருவாக்கிய மென்பொருளில் , குறைகளை ஒவ்வொன்றாக கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருக்கும்போது டெவலப்பருக்கு கோபம் உச்சத்தில் ஏறும்.  இருக்கிற பணியின் நடுவே அந்தக் குறைகளையும் சரிசெய்து ,அதன்பின் பாதியில் விட்ட பணியையும் தொடர்ந்து ப்ராஜக்டை முடிப்பதற்குள் தலைவலி தான். நாம் இவ்வளவு வேலை செய்கிறோமே, இவன் சுலபமாக குறை கண்டுபிடிக்கிறானே, இவனால் தான் ப்ராஜக்டே நகர மாட்டேன் என்கிறது என்று மனம் கொதிக்கும். குறை கண்டுபிடிப்பதெல்லாம் ஒரு வேலையா என்று தோன்றும். ஒருவேளை நம்மை தனிப்பட்டு பழிவாங்குகிறானோ என்று கூடத் தோன்றும்.  ஆனால் கொஞ்சம் விலகி நின்று பொறுமையாக யோசித்தால் புரியும் .  அந்தக் குறைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்