Posts

Showing posts from December, 2020

கற்பி

  இது ஒரு சுய தம்பட்டப் பதிவாக பார்க்கப் படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன் சமீபத்தில் இத்தனை மகிழ்ந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இத்தனை மகிழ்ச்சியான பொழுதை பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும் முடியவில்லையே, என்ன செய்வது :) இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஜிம் நண்பர் செல்வா அழைத்திருந்தார். நேரில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். கொரானா முடக்கத்தால் அவரை  வேலையிலிருந்து நிறுத்துவிட்டார்கள். கல்லூரியில் இயந்திரவியல் படித்தவர். அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் அதே துறையில் தான். ஊருக்கு வந்து போது முன்பு கணினியில் இருந்த ஆர்வம் காரணமாக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொஞ்சம் ஜாவாஸ்க்ரிப்டும் , பைத்தானும் படித்திருக்கிறார். அதை வைத்து வேலை தேட முயன்ற போது சில இடங்களில், நிரல்மொழி மட்டும் போதாது, எதாவது ஃப்ரேம்வொர்க் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கத் தான் எனக்கு ஃபோன் செய்திருக்கிறார். நான் நான்கு வருடங்களுக்கு முன் வேலைதேடும்போது, துறைக்கு புதியவர்களென்றால் எதாவது நிரல்மொழி தெரிந்திருப்பதே போதுமானதாக