Posts

Showing posts from December, 2014
Image
சில வருடங்களாக அமேரிக்கர்கள் வியந்து கொண்டும் பாராட்டிக் கொண்டும் இருக்கும் பெயர் ”கே.ஆர்.ஸ்ரீதர்”.யார் இந்த ஸ்ரீதர்? என்ன செய்தார்? இவர் கண்டறிந்த ப்ளூம் எனெர்ஜி(Blomm Energy) என்னும் ஆற்றல் உலகையே இவர் பக்கம் திருப்பியுள்ளது. ”என்னய்யா இது! இந்த மின்சாரத்தைத் தயாரிக்க தான் இத்தனைப் பாடா? அணுசக்தியாம்,அனல்மின் நிலையமாம்,ஜெனெரேட்டராம்.இதனால் சுற்றுச் சூழலுக்கு எத்தனைப் பாதிப்பு தெரியுமா? ஒன்றும் செய்ய வேண்டாம்.என்னோடு வா.பெட்டியை எடு ,இணைப்பைக் கொடு,மின்சாரத்தைப் பெறு,முடிந்தது வேலை” இதுதான் இவரது சித்தாந்தம்.ஸ்ரீதர் திருச்சியில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில்(NIT) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.பின் மேற்படிப்பிற்காக அமேரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.அங்கு நியூக்லியர் டெக்னாலஜி துறையில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்று அங்கிருந்து வெளியேறினார்.ஸ்ரீதர் செய்த சிறந்த ஆராய்ச்சிகளுக்காக நாசா அவரைத் தன்னுடைய ஆராய்ச்சியாளார் குழுவில் இணைத்துக் கொண்டது.அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ்(Aero space technologies)

ஹிட்லர்

முகில் எழுதிய ஹிட்லர் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன்.  "என்னடா இது ?440 பக்கங்கள் என்று சொன்னார்களே ?இவ்வளவு விரைவில் படித்துவிட்டோமே .பலே அசோக் " என்ற பிரமிப்புதான் என்னை முதலில் பற்றிக்கொண்டது.மின்னல் வேகத்தில் செல்லும் மொழி நடை முகிலுக்குறியதே.அவரது எழுத்தில் ஏதோ மாயங்களும் மந்திரங்களும் தோன்றி நம்மை புத்தகத்தோடு கட்டி விடுகின்றன.நடுவில் வந்த அத்தியாயங்களை பயத்துடனும் நடுக்கத்துடனுமே படித்தேன். "எங்கே ஹிட்லர் ஃப்ரான்சுக்கு அடுத்தபடியாக ் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து விடுவாரோ ?எங்கே நாஜி வீரர்கள் படித்துக் கொண்டிருக்கும் நம்மை சுட்டுக் கொன்று விடுவார்களோ?"  என்ற அச்சமே ஏற்பட்டுவிடுகிறது.இதற்கு காரணம் ஹிட்லரின் எழுச்சியா ?அல்லது முகிலின் எழுத்தா என்பது குழப்பத்திற்கு உரியதே. யூதப்படுகொலைகளை நேரில் கண்டது போல் ஓர் உணர்வு.என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன்.அந்த பாதிப்பு இன்னும் அகளவில்லை.அந்தக் காட்சிகள் என்னை விட்டு மறைய மறுக்கின்றன.ஆனால் இன்றைய மகிழ்ச்சியான ஐரோப்பாவை பார்க்கும்போது ,பேரானந்தம்.. ஹிட்லரைப் பற்றிய புத்தகம் தானே அவரை கதாநாயகனாக மட்டுமே சித்தர