ஹிட்லர்

முகில் எழுதிய ஹிட்லர் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். 
"என்னடா இது ?440 பக்கங்கள் என்று சொன்னார்களே ?இவ்வளவு விரைவில் படித்துவிட்டோமே .பலே அசோக் " என்ற பிரமிப்புதான் என்னை முதலில் பற்றிக்கொண்டது.மின்னல் வேகத்தில் செல்லும் மொழி நடை முகிலுக்குறியதே.அவரது எழுத்தில் ஏதோ மாயங்களும் மந்திரங்களும் தோன்றி நம்மை புத்தகத்தோடு கட்டி விடுகின்றன.நடுவில் வந்த அத்தியாயங்களை பயத்துடனும் நடுக்கத்துடனுமே படித்தேன்.

"எங்கே ஹிட்லர் ஃப்ரான்சுக்கு அடுத்தபடியாக ் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து விடுவாரோ ?எங்கே நாஜி வீரர்கள் படித்துக் கொண்டிருக்கும் நம்மை சுட்டுக் கொன்று விடுவார்களோ?"  என்ற அச்சமே ஏற்பட்டுவிடுகிறது.இதற்கு காரணம் ஹிட்லரின் எழுச்சியா ?அல்லது முகிலின் எழுத்தா என்பது குழப்பத்திற்கு உரியதே.

யூதப்படுகொலைகளை நேரில் கண்டது போல் ஓர் உணர்வு.என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன்.அந்த பாதிப்பு இன்னும் அகளவில்லை.அந்தக் காட்சிகள் என்னை விட்டு மறைய மறுக்கின்றன.ஆனால் இன்றைய மகிழ்ச்சியான ஐரோப்பாவை பார்க்கும்போது ,பேரானந்தம்..
ஹிட்லரைப் பற்றிய புத்தகம் தானே அவரை கதாநாயகனாக மட்டுமே சித்தரித்திருப்பார்களோ என்று நினைத்தால் உங்கள் எண்ணம்  தவறு.வலிமையான ,வலுவான ஹிட்லரோடு ,அவரது  கொடூரத்தையும் ,மற்றொரு பக்கம் அவருடைய சிறுபிள்ளைத்தனங்களையும் விரிவாக எழுதியிருப்பது இந்தப் புத்தகத்திற்கு பலம் சேர்க்கிறது.  கடைசி பக்கத்தில் இந்தப் புத்தகத்திற்காக கொடுக்கப்பட்ட ஆதாரங்களைப் பார்த்தேன் ,அசந்துவிட்டேன் .
அடேங்கப்பா!எத்தனை புத்தகங்கள்,எத்தனை கட்டுரைகள்,எத்தனை இணையதளங்கள்.உண்மையில் கடின உழைப்பு தான்.

முகில் சார் "என்னடா இவன் நம்மள ஓவரா புகழுறானே ?ஐஸ் வைக்கிறானோ ?" என நினைத்து கோபம் கொள்ள வேண்டாம். ;) ;) ;) .உண்மையை உள்ளபடி எழுதியுள்ளேன்.இப்படி ஒரு விரிவான புத்தகத்தை அளித்ததற்கு நன்றி முகில்  ... :)  ;) ;)

                  -க .அசோக் ராஜ்
                   

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182