Posts

Showing posts from September, 2023

மண்ணில் உப்பானவர்கள்

Image
தண்டியாத்திரை அல்லது உப்புசத்தியாகிரகம். இவ்விரு வார்த்தைகளையும் நிச்சயம் அனைவரும் கடந்து வந்திருப்போம்.  அதைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது தான். ஆனால் எல்லோருமே அதன் தீவிரத்தையும் ,அன்றைய காலத்தில் அதன் தேவையையும், அது மக்களிடையே உண்டாக்கிய தாக்கத்தையும் உணர்ந்திருப்பதன் சாத்தியங்கள் குறைவு. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு நடந்து சென்று, ஒரு பிடி உப்பை கையில் அள்ளுவதன் மூலம், சர்வ வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் அரசை பயம் கொள்ள வைக்க முடியுமா எனத் தோன்றுவது இயல்பு தான். ஆனால் அதுவே நடந்தது. இப்போராட்டத்தின் அத்தனை தகவல்களையும் ,அவ்வளவு விரிவாகவும் நுட்பமாகவும், அதேநேரத்தில் உணர்ச்சிகரமாகவும் தனது ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சித்ரா பாலசுப்ரமணியன்.  இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமே, அதன் கட்டமைப்பு தான். போராட்டம் பற்றிய தகவல்களுக்கு முன், அதில் காந்தியுடன் பங்கு பெற்ற ,நாம் கவனிக்கத் தவறிய அல்லது மறந்து போன களச்செயல்பாட்டாளர்கள் அத்தனை பேரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார் சித்ரா. ஒவ்வொரு நாளும் காந்தி பயணித்த ஊர்கள், அங்கே நடந்