கற்பி

 இது ஒரு சுய தம்பட்டப் பதிவாக பார்க்கப் படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன் சமீபத்தில் இத்தனை மகிழ்ந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இத்தனை மகிழ்ச்சியான பொழுதை பகிர்ந்துகொள்ளாமல் இருக்கவும் முடியவில்லையே, என்ன செய்வது :)

இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஜிம் நண்பர் செல்வா அழைத்திருந்தார். நேரில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும்.

கொரானா முடக்கத்தால் அவரை  வேலையிலிருந்து நிறுத்துவிட்டார்கள். கல்லூரியில் இயந்திரவியல் படித்தவர். அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் அதே துறையில் தான்.

ஊருக்கு வந்து போது முன்பு கணினியில் இருந்த ஆர்வம் காரணமாக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொஞ்சம் ஜாவாஸ்க்ரிப்டும் , பைத்தானும் படித்திருக்கிறார்.

அதை வைத்து வேலை தேட முயன்ற போது சில இடங்களில், நிரல்மொழி மட்டும் போதாது, எதாவது ஃப்ரேம்வொர்க் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கத் தான் எனக்கு ஃபோன் செய்திருக்கிறார். நான் நான்கு வருடங்களுக்கு முன் வேலைதேடும்போது, துறைக்கு புதியவர்களென்றால் எதாவது நிரல்மொழி

தெரிந்திருப்பதே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டியான சூழல் காரணமாக புதியவர்களின் மேலும் நிறைய எதிர்பார்க்கின்றன நிறுவனங்கள்.

சரியென்று , அவருக்கு Angular கற்றுக் கொடுக்கலாம் எனத் தீர்மானித்தேன்.அவருக்கு ஆங்குலரும் , ஜாவாஸ்க்ரிப்டும்

கற்றுக் கொடுப்பதற்காக  அன்றிலிருந்து தினம் ஒரு மணிநேரமென கூகிள்மீட்டில் சந்த்தித்தோம்.  அவர் ஆரம்பத்தில் தடுமாறுவார் என்றே நினைத்தேன். ஆனால் என் எண்ணங்களை

உடைத்தெறிந்தார். தினமும் சொல்பவற்றை அன்றே பயிற்சி செய்து பார்த்து அடுத்த நாள் வந்து காட்டுவார். சில நேரங்களில் சொல்லாத புதியவற்றையும் முயற்சி செய்து

பார்த்திருப்பார். வியந்துவிட்டேன். அவரது ஆர்வத்துக்கு தீனி போட முடியாமல் இதுவரை படித்திராதவற்றையெல்லாம் நான் தேடிக் கற்றுக் கொண்டேன் என்றால், அவரது ஆர்வத்தின்

எல்லையின்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஒரு மாதத்தில் ஒரளவு தேவையானவற்றையெல்லாம் பார்த்து முடித்திருந்தோம். அதன் பின் சில வாரங்களுக்கு தொடர்ச்சியான

வேலைப்பளுவினால் அவரிடம் உரையாட முடியாமல் போயிருந்தது. இன்றைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் ஃபோனில் அழைத்தவர்,


“ஜி. ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பரா வேலை கிடச்சிருக்கு”


சாலையில் நடந்து கொண்டிருந்தவன் அப்படியே சில நொடிகள் நின்றேன். என்ன தான் செய்கிறோமோ என சலிப்பாக வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு இப்படியொரு நிகழ்வு

எத்தனை சந்தோசங்களைக் அளித்திருக்கும் என உங்களால் உணரமுடியுமென்றே நினைக்கிறேன். ஒருவரின் வாழ்க்கையை ,

நேரடியாக பாதித்திருக்கிறேன் என்ற எண்ணமே ஏதோ செய்தது. இவ்வுணர்வு எனக்கு ரொம்பவே புதிதாகத் தானிருக்கிறது. நான் முதலிலேயே சொன்னது போல் இது எனது சுய பிதற்றலாகத் தெரிவதற்கான சாத்தியங்கள்

உண்டு. அதனாலேயே நீண்ட நேரமாக  எழுத வேண்டாமென்றே நினைத்தேன். ஆனால் இதைச் சொல்லாமல் இந்த நாளை கடக்க முடியுமெனத் தோன்றவில்லை. இதைப்

படித்து யாருக்கேனும் கற்றுக் கொடுக்க வேண்டுமெனத் தோன்றினால் இன்னும் மகிழ்வேன் :)



Comments

  1. நல்லதொரு சேவை... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நீங்கள் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்வதற்கான ஒரு நல்ல செய்தி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை