FOMO
தற்செயலாக அலுவலகத்தில் படித்தவொரு கட்டுரையால் இரண்டு வாரமாக ஃபேஸ்புக் பக்கமே வரவில்லை. FOMO என்பதைப் பற்றி அன்றைக்கு தான் கேள்வியே பட்டேன். அதன் பின் பாட்ஷா ரஜினி மாதிரி "சொல்லுங்க சொல்லுங்க. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்திங்க" என்று என்னுடைய கடந்த காலத்தையெல்லாம் யோசிக்கிற போது நானும் முழு ஃபேஸ்புக் வாழ்நாளிலுமே இந்த FOMO சனியனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. நான் மட்டுமா என்ன. நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அட. நிச்சயம் பட்டிருப்பீர்கள். Fear Of Missing Out என்று விரித்துச் சொன்னால் புரியாமல் இருக்கப் போவதில்லை. அதாவது நம்முடைய ஃபேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ நம்முடன் நட்பில் இருப்பவர்கள் நிறைய பேர் நம்மைவிட மகிழ்ச்சியானவர்களாக புத்திக் கூர்மையுடையவர்களாக இருப்பதாகவும் நாம் அவர்களை விட பின் தங்கியிருப்பதாகவும் நினைத்து அடிக்கடி கையைப் பிசைந்து கொள்வோம். அவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க என்ன செய்வதென்று தெரியாமல் அடிக்கடி இங்கே ஏதாவது பதிவு செய்து கொண்டேயிருக்கிறோம். உதாரணமாக என் நண்பரொருவர் மழையில் நனைவதாகப் பதிவிடுகிறார் இதோ நானும் Feeling awesome in rain.Ilayaraja.Coffee . நண்பர் இன்றைக்கு விஷ்ணுபுரம் படித்திருக்கிறார். அட. நான் Reading Monk who sold his Ferrari. நண்பர் கொடைக்கானல் போயிருப்பதாக ஒரு படத்தை இங்கே காட்டுகிறார். நான் Enjoying chill climate in Ooti . இப்படியாக நாம் நம்மை அவர்களைப் போலவே இன்ப வெள்ளத்தில் நீந்துபவர்களாக காட்ட என்னத்தையாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களைப் போல இல்லாமல் நாம் வாழ்வின் சிறந்த தருணங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகத்துடனேயே ஓட்ட வேண்டியிருக்கிறது. உண்மையில் நாம் இப்படியெல்லாம் குதூகலத்துடன் இருக்கிறோமா என்றால் ஒரு ...ம் இல்லை. சரி இந்தப் பதிவுகளைப் போடும் நண்பர்களாவது ? ம்ஹூம். அவர்களும் FOMO தான். அவரவர்க்கு அவரவர் கஷ்டங்களென இருக்கத்தான் செய்கிறது. சுற்றுலா செல்வதே புதிய ப்ரொஃபைல் பிட்சர்களுக்காகத் தானே. இதோ நான் எழுதிக் கொண்டிருப்பதற்கு FOMo இல்லாமல் வேறென்ன பெயர் . இதெல்லாம் எனக்கு நேர்ந்ததில்லை என்று சொன்னால் நீங்கள் புருடா விடுகிறீர்கள் என்பது அர்த்தம்.
சரி தான்... ஆனா சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது...
ReplyDelete