விப்ரோவின் வளர்ச்சிக்கு காரணமான யானை
சில நாட்களுக்கு முன்
விப்ரோவின் நிறுவனர்
அஸிம்
ப்ரேம்ஜி பற்றி என்.சொக்கன்
எழுதிய
புத்தகத்தை படித்தேன்.அதில்
வந்த ஒரு சம்பவம்
எனக்கு நம்பிக்கையை தந்தது.அதே கதையை என்
நடையில் எழுதும்
முயற்சியில் தான்
இப்பொழுது இறங்கி உள்ளேன்.ஆனால்
நான் ஒன்றும்
ஜே.கே.ரௌலிங் போல
ஹேரிபார்ட்டர் எழுதும்
தாதா அல்ல .இப்போது தான்
பிறந்து எழுத்துத்
துறையில் நடை பழகிக்
கொண்டிருந்தது சிறு குழந்தை.அதனால்
சற்று பல்லைக் கடித்துக்
கொண்டு படித்து விடுங்கள் .சரி சரி வீணாக
பேசிக்
கொண்டிராது கதைக்கு வருவோம்.ஒரு ஊரில்
ஒரு பையன்
என்பது போல்
பாட்டி கதை அல்ல
இது .புளி சாதத்தை கட்டிக்
கொண்டு குழந்தைகளுடன்
கிளம்புங்கள்.நாம்
போகவிருக்கும் இடம்
மிருக காட்சி சாலை .
அஸிம் ப்ரேம்ஜிக்கு ஊர்
சுற்றுவதென்றால்
கொள்ளை பிரியம்.சனி,ஞாய
ிறு என்றில்லாமல் நேரம்
கிடைக்கும்
போது வெளியில் விசிட்
அடித்து விடுவார்.அப்படி
யான நேரத்தில்
விப்ரோவின்
அப்போதைய தலைவர்
விவேக் பாலுடன் மிருக
காட்சி சாலைக்குச்
சென்றிருந்தார்.
வழக்கமான மிருக
காட்சி சாலைகளை போலத்தான்
இங்கும்
குரங்குகளும்,மா
ன்களும் ,மயில்களும்
கூண்டுக்குள்
அடைபட்டுக்
கிடந்தன.இருவரும்
ஒவ்வொரு விலங்காக
கண்டு ரசித்துக்
கொண்டிருந்தார்க
ள்.ஒரு வழியாய்
சுற்றுலா முடியும்
நிலை.கடைசியாக
யானைகளின்
செக்ஷன்.வழக்கம் போல
அஸிம் யானையின்
உருவத்தைக்
கண்டு பிரம்மித்துக்
கொண்டிருந்தார்.உடன்
வந்த விவேக்
பாலோ யானையை மட்டுமல்லாது அது கட்டப்
பட்டிருந்த கயிற்றையும்
கவனித்தார்.அவ்வ
ளவு பெரிய
மெகா சைஸ் கொண்ட
யானை சிறு குச்சியில்
கட்டப்பட்டிருந்தது.இதைக்
கண்டவுடன்
அவருக்கு ஆச்சரியம்
பொங்கியது.
"என்னடா இது?
மிகப்பெரும் உருவம்
கொண்ட
யானையை இச்சிறு கொம்பில்
கட்டி வைத்துளாளார்களே
?
யானை சற்று காலை அசைத்தால்
கூட அக்கம்பு பிய்த்துக்
கொண்டு வந்துவிடும்.ஆனா
லும்
யானை ஒரு அடி கூட
நகரவில்லையே ?ஏன் ?"
இப்படியாக பல
கேள்விகளை கேட்டுக்
கொண்டே வீட்டிற்கு போனார்...அந்த
ஒலி அவர் மனதில்
கேட்டுக்
கொண்டே இருந்தது."ஏன்
அந்த
யானை நகரவில்லை? ஏன்
அந்த
யானை நகரவில்லை? ஏன்
அந்த
யானை நகரவில்லை?"
ஒரு நாள்
யோசித்தார் ...இரண்டு நாள்
யோசித்தார் ...மூன்றாவது நாளும்
யோசித்தார் ...அவரும்
எத்தனை நாள்தான்
யோசித்துக்கொண்ட
ே இருக்க
முடியும்.சட்டென்று அந்த
மிருகக்காட்சி சாலைக்கு விரைந்தார்.எங்க
ும் நிற்கவில்லை.நேர
ே யானைகளின்
இடத்திற்கு தான்.அங்கிருந்த
யானைகளின்
பராமரிப்பாளரிடம் தன்
சந்தேகங்களை கொட்டினார்.அவரோ
சிறு புன்னகையுடன்
"சார் நீங்க
கேக்குறதெல்லாம்
கரெக்ட் தான்.அந்த
யானைகள்
சிறியதா இருக்கும்போதே இந்த
கம்பில்தான்
கட்டிவப்போம்.அப
்போ அதுங்க
கம்பை உடைக்க பல
தடவை முயற்சி பண்ணும்.ஆனா போதிய
பலம் இல்லாததால்முடிய
ாது.அதனால்
எப்போதுமே தன்னால
முடியாதுனு முடிவு பண்ணிவிடும்."
ஆஹா!
என்னவொரு நிகழ்வு .விவேக்
பாலுக்கு வாழ்வின்
அர்த்தமே புரிந்துவிட்டது
.அந்த
யானைகளை போல்தான்
நாமும்
வாழ்க்கையை ஓட்டிக்
கொண்டிருக்கிறோம
்.என்றோ எதற்காகவோ செய்ய
முடியாத
செயலை என்றுமே இயலாது என
முடிவு கட்டிவிடுகிறோம்
.அந்த யானைகளைப்
போலவே நம்முடைய
பலமும் தினம் தினம்
அதிகரித்துக்
கொண்டிருக்கிறது
..அய்யோ பாவம்
அவைகளைப்
போலவே நமக்கும்
இது தெரியாமலே போய்விடுகிறதே.
தோல்வி நம்மை துரத்தித்
துரத்தி அடித்தாலும்
முயற்சியைத்
தொடர்ந்து கொண்டே இருந்தால்
உறுதியாக
வெற்றியை எட்டிவிடலாம்.வர
லாற்றை சற்றே கவனித்துப்
பாருங்கள்.வெற்ற
ியாளர்களின் வாழ்வில்
தோல்விதான்
மிகப்பெரும் பங்காய்
உள்ளது.ஆபிரகாம்
லிங்கனுக்கும்தா
ன்,சார்லி சாப்லினுக்கும்
தான் ,எடிசனுக்கும்தா
ன்.முயற்சி உடையார் ,இகழ்ச்சி அடையார்....
நீங்களும்
இக்கட்டுரையை படித்து முடிக்க
தட்டுத்
தடுமாறி முயன்று கொண்டிருக்கிறீர
்கள் என்பது தெளிவாய்
தெரிகிறது.இத்தோ
டு முடித்துக்
கொள்ளளாமா ...
-க.அசோக் ராஜ்
10/06/2014
Comments
Post a Comment