புயல் பெண்

இரவில் ஐந்து நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிட்டால் கூட நம் கண்கள் இருளில் பரிதவிக்கின்ன.இந்த பரிதவிப்பிற்கு காரணமானவரோ மின்தடை அடுத்த மாதம் நின்றுவிடும்,தமிழகம்  மின்மிகை மாநிலமாய் மாறும் என மேடைகளில் அறிக்கை விடுகிறார் .பாவம் அப்பாவி கிராம மக்கள் இந்த EX-நடிகையின் பேச்சை நம்பி வாக்களித்து முதலமைச்சராக்கி விட்டார்கள் .அய்யய்யோ!நான் சொல்ல வந்த டாப்பிக்கே மாறி போயிருச்சே .மன்னிக்கவும்.முன்பு கூறியதை ஒரு ரப்பர் எடுத்து அழித்துவிடுங்கள்.மறுபடியும் முதலில் இருந்து வருவோம் .

இரவில் ஐந்து நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிட்டாலும் இருளில் பரிதவிக்கின்றோம்.கண்பார்வையற்றோர் வாழ்க்கை முழுதும் இந்த வேதனையை அனுபவிக்கின்றனர்.ஆனால் ஒருவரோ கண்பார்வை இல்லாமல் ,இரு காதுகளும் கேளாமல் மிகப்பெரும் அறிவு ஜீவியாய் விளங்கினார்.பல மேடைகளில் கண்ணீர் சிந்த பெண்களின் உரிமைக்காக வீர முழக்கமிட்டுள்ளார்.இதுவரை 54 புத்தகங்களை எழுதியுள்ளார்.கதைகளில் கூட இவரை போல ஒரு கதாபாத்திரத்தை காண  இயலாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவில் போராடியுள்ளார்.மாற்று திறனாளிகளின் கடவுளாய் இவர் திகழ்கிறார்.பொறுமை இழக்காதீர்கள்.அவர் யார் என கூறிவிடுகிறேன்.நாம் பள்ளியில் படித்த அதே ஹெலன் கெல்லர் தான்.அதே வீரமங்கை தான் .134 வருடத்திற்கு முன்பு அவர் பூமியில் அவதரித்த தினம் இன்று.சுருக்கமாய் சொல்வதென்றால் இன்று அவருடைய பிறந்தநாள்.

ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மாற்று திறனாளிகள் மட்டும் அல்ல அனைவருமே படிக்க வேண்டும் .படியுங்கள்.நம் துன்பங்கள் சிதறி ஓடிவிடும்.

ஹேப்பி பெர்த்டே ஹெலன் கெல்லர் ...

                        -க.அசோக் ராஜ்
                            27/06/2014

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182