மகாத்மா
இன்று மதுரை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன் .தமுக்கம் மைதானத்தினுள் நுழைந்ததும் என்னை பரபரப்பு தொற்றிக்கொண்டது.அனைத்து ஸ்டால்களிலும் நுழைந்து பார்த்தேன் .சில புத்தகங்களை வாங்கினேன்,சிலவற்றின் முன்னுரையை மட்டும் படித்துவிட்டு அடுத்த வருடம் வாங்கி கொள்ளலாம் என நினைத்துக் கொண்டேன்.இறுதியாக ரூபாய் 500ல் 7 புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது.அருகில்தான் காந்தி மியூசியம் உள்ளதென என்றோ ஒருநாள் கேள்விப் பட்டிருக்கிறேன்.காந்தியைப் பற்றி அதிகம் படித்திருந்தாலும் நேரே சென்று பார்த்தது வித்தியாசமாக இருந்தது.காந்திபங்குகொண்டபல வரலாற்று நிகழ்வுகளின் புகைப்படங்களும் அங்கே இருந்தன.கடைசியில் இருந்த ஓர் அறை.அதன் வாயிலில் இருந்த பலகை.
"இந்த அறையில் மகாத்மா காந்தி உபயோகித்த பொருள்கள் உள்ளன"
உள்ளே விரைந்தேன்.காந்தி பயன்படுத்திய கரண்டி,கண்ணாடி,படித்தபுத்தகங்களின் மாதிரி என பல பொருள்கள் இருந்தன.ஒர் மூலையில் இருந்த கண்ணாடி கூண்டினுள் ஒரு வேஷ்டி இருந்தது .அருகில் சென்றேன்.பலகையைப் பார்த்தேன் .ஆம்.காந்தியினுடையது தான்.அந்த மனிதர் சுடப்பட்ட போது அணிந்திருந்த அதே வேஷ்டிதான்.அப்பொழுது ஏற்பட்ட உணர்வை என்னால் விவரிக்க இயலவில்லை.என் கனவு நாயகன் பயன்படுத்திய உடையின் அருகே நிற்கும் ஆனந்தமா ?,அவர் எனக்காக சிந்திய ரத்தத்தை பார்த்த அதிர்ச்சியா ?,அவரைபோல வாழவேண்டும் என என்னுள்ளே ஏற்பட்ட உறுதியா ?எது அந்த உணர்வு.என்னால் சரியாக விளக்க இயலவில்லை.அந்த உணர்வு இவை அனைத்தும் கலந்ததாக இருந்தது.அந்த இடத்தை விட்டு என்னால் வர முடியவில்லை .சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் .அப்பொழுது மற்றொரு சிந்தனை என்னை மற்றொரு சிந்தனை என் பற்றிக் கொண்டது .நான் பார்த்த அநேக மாணவர்கள் கூறுவது "காந்தி வேஸ்ட் ,அவர் கெட்டவர்,கோழை ".அவர்கள் ஏன் இப்படிபட்ட தவறான எண்ணங்களை கொண்டுள்ளார்கள் என எனக்குத் தெரியவில்லை.இதற்கு காரணம் என்னவென வெகு நேரம் சிந்தித்தேன்.இறுதியாக அகப்பட்டுக் கொண்டது.இந்த நிலைக்கு காரணம் பள்ளிகள் தான் .ஆம்.நாம் படித்த அதே பள்ளிகள் தான்.காந்திஉப்பு சத்தியாகிரகம் செய்த தினத்தையும் ,அவர் சுதந்திரம் பெற்றுத்தந்த தினத்தையும் மனப்பாடம் செய்ய வைக்கும் பள்ளிகள் அவரை பற்றியும் அவர் செய்த அகிம்சை போராட்டங்களையும் நமக்குச் சொல்ல மறந்துவிட்டன.நிச்சயம் இது மாற வேண்டும்.இல்லை .மாற்றப்பட வேண்டும்.
க.அசோக் ராஜ்
Comments
Post a Comment