இயேசு என்றொரு மனிதர் இருந்தார்

வணக்கம் ,

சில தினங்களுக்கு முன் நண்பர் சுந்தரின் உதவியால் பைபிள் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பைபிள் .உலகத்தின் மிகப்பிரபலமான புத்தகம் தான்.ஆனால் அப்புத்தகத்தின் முதல் பக்கமே முழு பிழையாய் இருப்பதாக உணர்கிறேன்.
இதுதான் அந்த முதல் பக்கத்தின் சுருக்கம்தான் இது .

"கடவுள் நிலம் உண்டாகட்டும் என்றார்,நிலம் உருவானது .
கடல் உண்டாகட்டும் என்றார்,கடல் உருவானது.
பகல்,இரவு உண்டாகட்டும் என்றார்,உருவாயின.
உயிரினங்கள் உண்டாகட்டும் என்றார்,உயிரினங்கள் பிறந்தன ."

இப்படியாக பல "ஆகட்டும்"களைக் கூறி முழு உலகையும் சில நொடிகளில் படைத்துவிட்டார்.ஆனால் இவைகளைப் படிக்கும்பொழுது குழந்தைகளுக்கான காமிக்ஸ் கதைகளை போலத்தான் தோன்றுகிறது .

என்னுள் பல கேள்விகளும் எழுகிறது.இவ்வளவு பெரிய,அகண்ட,பிரம்மாண்டமான உலகம் எப்படி இப்போது உள்ளது போல் சகஜமான சூழலில் தோன்றியது?எப்படி இவற்றை கடவுளால் ஒரு நொடியில் உருவாக்க முடிந்தது?ஆதிமனிதர்களான ஆதாம்,ஏவாளால் பிறரிடமும் கடவுளிடமும் எப்படி உரையாட முடிந்தது?ஒரு நொடியில் அவர்களுக்கான மொழியை உருவாக்கிக் கொண்டார்களா?கொஞ்சம் பொறுங்கள்,இன்னொன்றும் இடிக்கிறதே ?
கடவுள் இவ்வுலகத்தை படைத்ததை யார் பார்த்தது ?அவர் அதைக் கண்டிருந்தால்,எந்த மொழியில் அதைக் குறிப்பெடுத்தார்?எந்த சாட்சியங்களைக் கொண்டு இதை பைபிளில் சொருகினார்கள்.
இப்படியாக பல கேள்விகள் கேட்கலாம்.கேட்டுக் கொண்டே போகலாம்.இத்தனை கேள்விகளை அடுக்குவதால் நான் கிருத்தவ மதத்தின் எதிர்ப்பாளன் அல்ல.கிருத்துவ மதத்தையும் இயேசு கிறிஸ்த்துவையும் அதிகம் மதிப்பவன்.கிருத்துவ மதத்தின் உண்மையை விளக்கத்தான் இவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.இயேசு இப்பூமிக்கு வந்ததின் உண்மையான நோக்கம் தான் என்ன?முழு உலகும் இதைத்தவறாகவே புரிந்து கொண்டுள்ளது.

ஏன் அவர் பிறந்தார்?எந்நேரமும் நாம் அவரை துதிபாடவா?இயேசு நமக்காக தான் பிறந்தார்,நமக்காகத் தான் மரித்தார் என்று பிறரிடம் புராணம் பேசவா?போப்பாண்டவரிடமும் பாதிரியார்களிடமும் பாவ மன்னிப்பு கேட்கவா ?

இவைதான் இயேசு கிறித்தவை வழிபடும் முறையா?நிச்சயமாக இல்லை.மேலே சொன்ன எவையும் இயேசு கிறுஸ்துவின் நோக்கம் அல்ல.இவை அவருடைய நோக்கம் இல்லை என்றால் ,அப்படி எதைத்தான் அவர் போதித்தார்.

*எதிரிகளையும் நேசிக்க வேண்டும்.
*நமக்கு பிறர் தீங்கிழைத்தால் யோசிக்காமல் அவர்களை மன்னிக்க வேண்டும்.
*பிறருக்கு தீமை செய்ய கனவிலும் நினைக்கக் கூடாது.
*பிறரை வசைபாடக் கூடாது.
*அழகைக் கண்டு அல்லாமல் மனதைக் கண்டு மனிதர்களை மதிப்பிட வேண்டும்.

இவைதான் அம்மாமனிதர் போதித்தவை.இவற்றை தான் நாம் பின்பற்ற வேண்டும் .அதனால் உலகம் அமைதி பெற வேண்டும்.இதுதான் இயேசு பிறந்ததின் உண்மையான நோக்கமும் கூட.ஆனால் இவற்றை நாம் பின்பற்றுகிறோமா?நிச்சயமாக இல்லை.இவற்றை கூறுவதால் நான் மகான் அல்ல.அந்த "இல்லை"க்குள் நானும் அடங்குவேன்.
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்றார் .ஆனால் சட்டைக் கையை மேலே ஏற்றி விட்டு பிறரை அடித்து துவைக்கிறோம் .
இயேசுவின் போதனைகள் அனைத்தையும் 6க்கு 6 அடி குழி தோண்டி புதைத்து விட்டு அவரை பற்றி மட்டுமே புகழ் பாடுவதுதான் உண்மையான வழிபாடா ???அதுதான் உண்மையான கிறுஸ்தவமா ?இல்லவே இல்லை .இவை நிச்சயம் உண்மையான வழிபாடாகாது.
கிறுஸ்தவன் மட்டும் அல்ல,உலகில் பிறந்த ஒவ்வொருவனும் இயேசு கிறுஸ்துவின் வழியை பின்பற்ற வேண்டும்.
அவரைப் பின்பற்றிய காந்தியால் இந்தியாவை விடுவிக்க முடிந்தது.மார்ட்டின் லூதர் கிங்கால் கருப்பர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது.ஏன் நம்மால் முடியாது ?
நிச்சயம் முடியும்.
நான் பின்பற்றச் சொல்லுவது கிருத்துவ மதத்தை அல்ல,இயேசு என்னும் சாதாரண மனிதனின் போதனைகளை தான் .இது மதமாற்றக் கட்டுரை அல்ல,உங்கள் மனதை மாற்ற எழுதப்பட்ட கட்டுரை.

நான் இக்கட்டுரையில் திரும்பத் திரும்பச் சொல்ல வருவது ஒன்றைத்தான் ...இயேசுவின் வார்த்தைகளை மதியுங்கள்.பின்பற்றுங்கள்.ஆனால் அவரைப் பற்றி புகழ் பாடுவதில் ஒருபோதும் நேரத்தை வீணடிக்காதீர்கள் ..
ஏனென்றால் அவர் கடவுள் அல்ல.நம்மைப் போன்ற சாதாரண  மனிதர் தான்
்.ஆனால்  அவர் மாமனிதர்.நம் வாழ்வை தூய்மையாக்கப் பிறந்த மகாமனிதர் .

              முற்றும்
                               க.அசோக் ராஜ்

Comments

Post a Comment

Popular posts from this blog

கேள்வி எண் 17182

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை