20 வயதில்
சிறுகதை : காலை 7 மணிக்கு இங்கே தெருமுனையில் நின்று கொண்டிருக்கிறேன் . அதுவும் அயர் பண்ணிய சட்டை , பேண்ட் அணிந்திருக்கிறேன் , உயர்தர வாசனைத் திரவம் பூசியிருக்கிறேன் . ஒரு மனிதன் காலை 7 மணிக்கு ஏன் இப்படி பகட்டாக நின்று கொண்டிருக்கிறான் . காரணம் இல்லாமலா . ஆனந்தி எங்கள் வீட்டின் அருகே வசிக்க வந்து 6 மாதங்கள் ஆகிறது . இப்பொழுது இப்பக்கம் வருவாள் . காலையில் தண்ணீர் குடத்துடன் , நீர் இறைக்க இந்த வழி தான் தினம் செல்கிறாள் . அதனால் இங்கேயே தினம் தினம் காத்திருக்கிறேன் . அவள் அத்தனை அழகு கிடையாது . ஆனால் அழகாக இருக்கிறாள் . அவளைப் பார்க்கும் போதும் மட்டும் ஏதோ உற்சாகம் வந்துவிடுகிறது . உலகத்தில் யாருக்கும் கிடைக்காத ஒன்றை , என்னால் பார்க்க முடிகிறதென்கிற ஆனந்தம் . எனக்கு சிகரெட் பிடிக்கும் . தினம் நான்கு பிடித்தாக வேண்டும் . ஆனால் இப்பொழுது நான் அதைத் தொடுவதில்லை . நான் சிகரெட் பிடிப்பதை அவள் பார்த்துவிட்டால்? பின் என்ன செய்வேன் ? என்னைக் கெட்டவன் என நினைத்துவிடுவாளே ? பிறகு என்னைப் பார்ப்பாளா ? அதனால் வேண்டாம் . போதும் . ஏன் எனக்க...