நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை
முன்பு Steven Covey ன் புத்தகத்திலிருந்து paradigm shift என்ற கருத்தைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதாவது நமக்குப் பிறர் தீங்கு ஏதும் செய்தாலோ, தொந்தரவு செய்தாலோ அவரை உடனே தண்டித்துவிடக் கூடாது. அவர்கள் எந்தத் தருணத்தில் அந்த தவறைச் செய்தார்கள், அவர்களுக்கு ஏன் அப்படி ஒருசூழல் ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும் . அவர்களை மன்னிக்க வேண்டும். இதைத் தான் ஸ்டீவன் கவே சொல்கிறார். இதை அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்திலிருந்து உணர்ந்து எழுதியிருக்கிறார். அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் ஒரு கம்பராமாயணம் பாடலைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். ஸ்டீவன் கவே சொல்லியிருக்கும் அதே கருத்தை ,கம்பர் மிக அழகாக , உணர்ச்சியுடன் ராமாயணம் பாடல் ஒன்றில் சொல்லியிருக்கிறார். அதைப் படித்து வியந்து போனேன். அந்தப் பாடல் இதுதான் : ’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள் மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த! விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான் இந்தப் பாடல் நடக்கும் சூழல் என்னவென்றால் , தசரதனிடம...