என்ன செய்தேன் இவ்வருடம்
பணி உயர்வுடன் கூடிய நல்ல வேலை, நல்ல நிறுவனம் என மகிழ்ச்சியுடன் தொடங்கியது ஆண்டு. அதில் முழுமையாக திளைப்பதற்குள் மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம் பனால். கொஞ்சமும் எதிர்பாராதா ஒரு பிரிவு . அதற்கு சற்றும் தயாராக இருந்திராத என்னை அது பிய்த்துப் போட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல், நேரம் அனைத்தையும் வருத்தப் படுவதற்கென்றே ஒதுக்கிவிட்டு வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள். கசப்பும், வெறுப்பும் ,வன்மமும் மனதில் நிறைந்து விட்ட நாட்கள். இன்றைக்கு நினைத்துப் பார்க்கிற போது எப்படி அதையெல்லாம் கடந்து வந்தேன் என ஆச்சரியமாகத்தானிருக்கிறது. நாம் எத்தனை பூஞ்சையாக மாய உலகில் வாழ்ந்து என்றும் அதுதான் உணர்த்தியது . ஆனால் இப்பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதிலிருந்து மீண்டு வர எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், இன்னும் வேகமாக அதற்குள் தள்ளியது. நதியில் அடித்துச் செல்லப்படுகிற சருகுபோல, வாழ்க்கைக்கு நம்மை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நிற்பதே அதற்கான தீர்வு என உணர்ந்து கொள்வதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஹூம் .என்னை நானே கொஞ்சம் மன்னித்துக் கொண்டேன், அவர்களையும். அச்சமயங்களில் ...