என்ன செய்தேன் இவ்வருடம்


 


பணி உயர்வுடன் கூடிய நல்ல வேலை, நல்ல நிறுவனம் என மகிழ்ச்சியுடன் தொடங்கியது  ஆண்டு. அதில் முழுமையாக திளைப்பதற்குள் மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம் பனால்.



கொஞ்சமும் எதிர்பாராதா ஒரு பிரிவு . அதற்கு சற்றும் தயாராக இருந்திராத என்னை அது பிய்த்துப் போட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல், நேரம் அனைத்தையும் வருத்தப் படுவதற்கென்றே ஒதுக்கிவிட்டு வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள். கசப்பும், வெறுப்பும் ,வன்மமும் மனதில் நிறைந்து விட்ட நாட்கள்.  



இன்றைக்கு நினைத்துப் பார்க்கிற போது எப்படி அதையெல்லாம் கடந்து வந்தேன் என ஆச்சரியமாகத்தானிருக்கிறது.  நாம் எத்தனை பூஞ்சையாக மாய உலகில் வாழ்ந்து என்றும் அதுதான் உணர்த்தியது . 



ஆனால் இப்பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதிலிருந்து மீண்டு வர எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், இன்னும் வேகமாக அதற்குள் தள்ளியது.


நதியில் அடித்துச் செல்லப்படுகிற சருகுபோல, வாழ்க்கைக்கு நம்மை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நிற்பதே அதற்கான தீர்வு என உணர்ந்து கொள்வதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஹூம் .என்னை நானே கொஞ்சம் மன்னித்துக் கொண்டேன், அவர்களையும்.



அச்சமயங்களில் என்னை தேற்றிய அனைவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். முக்கியமாக சத்குரு. அவரது காணொளிகள் மட்டுமே என்னை கொஞ்சம் தேற்றியது.


பதறாமல், அவசரமின்றி எதையும் கவனித்து நோக்க கற்றுக் கொடுத்தது.



நீண்ட காலமாக நினைத்து , செயல்படுத்த முடியாத சில விஷயங்கள் இவ்வருடம் செய்தேன். 


முன்னெப்போதையும் விட தொழில்நுட்பத்தில் இவ்வருடம் நிறைய படித்தேன், வேலையில் புதிதாக நிறைய முயற்சி செய்து பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.


கொரோனா கட்டுப்பாடுகளால் நின்று போன உடற்பயிற்சிகளை மீண்டும் தொடங்கினேன். தொடர்ச்சியாக ஜிம்மிற்கு சென்றேன். கார் ஓட்ட கற்றுக் கொண்டேன். நீச்சல் பழகினேன். எந்த வருடத்தை விடவும் இவ்வரும் நிறைய படங்கள் பார்த்தேன்.




நீண்ட நாட்களாக செய்ய நினைத்த பங்குச் சந்தை முதலீட்டை தொடங்கினேன்.  கொஞ்சம் லாபமும் பார்த்தேன் :) . புதியவன் என்பதால் இன்னும் நிறுவனப் பங்குகளை வாங்கவில்லை. இண்டக்ஸ் ஃபண்டிலேயே தான் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து கொண்டிருக்கிறேன்.

 


முக்கியமாக Bosscoder ல் சேர்ந்தது. ஓய்வெடுக்கவே நேரமின்றி கற்றுக் கொள்வதில் கிடைக்கிற இன்பம் எவ்வளவு அலாதியானது என்று உணர்த்தியது. 


 


இவ்வருடமும் முழுதாக வொர்க் ஃப்ரம் ஹோமிலேயே கழிந்தது. அவ்வப்போது போர் அடித்தாலும் , நிம்மதியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. 


நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் :)





Comments

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள் அசோக்

    ReplyDelete
    Replies
    1. Thanks 😃👍🏻👍🏻. May i know your full name.

      Delete

Post a Comment

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182