800
இன்றைய கிரிக்கெட் என்பது பெரும்பாலும் பேட்டிங்கிற்காகவே பார்க்கப்படுகிறது. அதிரடி பேட்டிங்கை கொண்ட போட்டிகளாலும், பேட்ஸ்மென்களாலும்தான் இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர் என்பதே உண்மை. அப்படியொரு காலத்தில் ஒரு ஆஃப் ஸ்பின்னரைப் பற்றி திரைப்படம் நமக்கு என்ன உற்சாகம் தந்துவிடப் போகிறதென்று நிறைய பேர் நினைக்கலாம். எனில் அவர்கள் முரளியின் வாழ்க்கையைச் சொல்லும் 800 திரைப்படத்தை நிச்சயம் ஒருமுறை பார்த்துவிட வேண்டும். விளையாட்டு வீரர்களைப் பற்றிய திரைப்படங்களில் இப்படத்திற்கு கண்டிப்பாக ஒரு தனி இடம் கிடைக்கும். முரளியின் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமில்லாது , அதில் தலைசிறந்த இடத்தைப் பிடிக்க அவர் எத்தனை தூரம் போராட வேண்டியிருந்தது என்பதையும் , கிரிக்கெட்டுக்கு வெளியே முரளி எத்தனை சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதையும் தான் இப்படம் முக்கியமாக நமக்குக் காட்டுகிறது. முரளி 800 விக்கெட் எடுக்கிற கடைசி போட்டியின் போது ஒரு பத்திரிக்கையின் தலைமை எடிட்டர் நாசருக்கும் ,இன்னொரு பத்திரிக்கையாளருக்குமான உரையாடலாகவே இப்படம் தொடங்கும் வாழ்நாள் முழுவதும் தனது பௌலிங் ஆக்சனுக்காகவும் தன் இனத்திற்...