FOMO
தற்செயலாக அலுவலகத்தில் படித்தவொரு கட்டுரையால் இரண்டு வாரமாக ஃபேஸ்புக் பக்கமே வரவில்லை. FOMO என்பதைப் பற்றி அன்றைக்கு தான் கேள்வியே பட்டேன். அதன் பின் பாட்ஷா ரஜினி மாதிரி "சொல்லுங்க சொல்லுங்க. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்திங்க" என்று என்னுடைய கடந்த காலத்தையெல்லாம் யோசிக்கிற போது நானும் முழு ஃபேஸ்புக் வாழ்நாளிலுமே இந்த FOMO சனியனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. நான் மட்டுமா என்ன. நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம். அட. நிச்சயம் பட்டிருப்பீர்கள். Fear Of Missing Out என்று விரித்துச் சொன்னால் புரியாமல் இருக்கப் போவதில்லை. அதாவது நம்முடைய ஃபேஸ்புக்கிலோ வாட்ஸ்அப்பிலோ நம்முடன் நட்பில் இருப்பவர்கள் நிறைய பேர் நம்மைவிட மகிழ்ச்சியானவர்களாக புத்திக் கூர்மையுடையவர்களாக இருப்பதாகவும் நாம் அவர்களை விட பின் தங்கியிருப்பதாகவும் நினைத்து அடிக்கடி கையைப் பிசைந்து கொள்வோம். அவர்களை விட நாம் மேலானவர்கள் என்பதை நிரூபிக்க என்ன செய்வதென்று தெரியாமல் அடிக்கடி இங்கே ஏதாவது பதிவு செய்து கொண்டேயிருக்கிறோம். உதாரணமாக என் நண்பரொருவர் மழையில் நனைவதாகப் பதிவிடுகிறார் இதோ நானும் Feeling awesom...