இன்சமாம் மற்றும் பிறர்
இன்று போல் எல்லாம் இல்லை. உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை தொடர்களில் வருடத்திற்கொரு முறை மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்கின்றன. ஆனால் இரு அணிகளும் சரளமாக மாறி மாறி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பயணித்து ஒருநாள், டெஸ்ட் தொடர்கள் ஆடிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. ஆச்சரியம் என்னவெனில் தொடக்கப்பள்ளியில் படிக்கிற வயதிருந்த எனக்கு தேசப்பற்றையெல்லாம் தாண்டி ,அன்றைக்கு ஆடிய பாகிஸ்தான் அணியை ரொம்பவே பிடிக்கும். பாகிஸ்தானுக்கும், இந்தியா தவிர இன்னொரு அணிக்குமான ஆட்டமென்றால் ,சந்தேகமின்றி பாகிஸ்தான் பக்கமே மனது நின்றது. இந்தியாவுக்கு எதிரான சில ஆட்டங்களில் கூட பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். : ) கிரிக்கெட்டின் எந்த நுணுக்கமும் தெரியாத அந்த வயதில் ஏன் அப்படி அவர்களை பிடித்தது என யோசித்துப் பார்த்தால் எந்தக் காரணமும் பிடிபடவில்லை. வியப்பாகத்தானிருக்கிறது. ஹூம். இன்றைக்கும் பாகிஸ்தான் அணி கொஞ்சமும் பலமிழக்கவில்லை. அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு நாம் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த வீரர்கள் அந்த அணியில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள்....