பாலர் பள்ளி

எனக்கு பாடங்களை நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.ஆங்கிலத்தில் ஒரு மொழி உண்டு ."First impression is best impression ".ஆனால் நான் நினைப்பது " First school is best school". நான் படித்த அந்த முதல் பள்ளிக்கூடம் என் வீட்டருகே இருக்கும் மணிவாசகர் பாலர் பள்ளி.அங்கு ஒரு வருடம் படித்தேன் .படிப்பை விட  விளையாட்டும் தூக்கமும் தான் முக்கிய பாடங்கள்.அங்கிருந்த ஆசிரியையின் பெயர் நினைவில் இல்லை .அவரிடம் எனக்குப் பிடித்த ஒரு செயல் ,அவர் யாரையும் அடித்து நான் பார்த்ததில்லை.மாணவர்கள் அனைவரையும் கண்ணா என்று அழைத்ததாக தான் என் நினைவில் உள்ளது.அந்த பள்ளியில் ஓர் அருமையான விதி உண்டு .மாணவர்கள் எல்லோரும் மதியம் தூங்க வேண்டும்.எங்களை தூங்க வைக்க படாத பாடு படுவார் ஆசிரியை.அங்கே நடந்த சுவையான நிகழ்வுகள் பல நினைவு இன்னும் நினைவு இருக்கிறது.பிறகு நான் அந்த வழியாக செல்லும்போது பலமுறை அந்த பள்ளிக்குள் பார்ப்பேன் .அதே ஆசிரியை .மாணவர்கள் வேறு .அவர் பாடல்களைச் சொல்ல சிறுவர்கள் அதைத் திரும்ப பாடிக் கொண்டிருந்தார்கள் .கடைசியாக போன  வருடம் பார்த்தபோது அதன் கதவு மூடப்பட்டிருந்தது.அந்த பள்ளியும் மூடப்பட்டுவிட்டது .

Comments

Popular posts from this blog

நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

கணிதத்தின் கதை

கேள்வி எண் 17182