சதுரங்கத்தின் வரலாறு
நண்பர்கள் அனைவருக்கும் செஸ் விளையாடத் தெரியும் . மின்னல் வேகத்தில் நகர்த்தி எதிரில் உள்ளவரைத் திணறடிக்கத் தெரியும். ஆட்டத்தின் நுட்பமான விஷயங்கள் நன்றாகவே தெரியும் . ஆனால் செஸ் ஆட்டம் வளர்ந்து வந்த வரலாறு தெரியுமா? செஸ் ஆட்டத்தின் முன்னாள் ஜாம்பவான்களைப் பற்றி அறிவீர்களா ? உலகத்தில் நடந்த பிரபலமான செஸ் ஆட்டங்கள் பற்றி அறிந்ததுண்டா? இவை அனைத்தையுமே சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்கிறது ஆயிஷா நடராஜன் எழுதிய “ஒரு தோழனும் மூன்று 3 நண்பர்களும்” புத்தகம். இது சிறுவர்களுக்காக எழுதப் பட்ட சிறிய நாவல் தான். ஒரே கல்ப்பில் படித்து விடலாம். ஆனால் இது ஏற்படுத்தும் தாக்கம் பெரியது.
செஸ் ஆட்டம் மட்டுமல்லாது, பிரபலமான பல புத்தகங்கள் பற்றி, வரலாற்று நிகழ்வுகள் பற்றி என பிரம்மிக்க வைக்கிறது. ராகுல் ஜி என்ற சிறுவன் தான் கதையைச் சொல்கிறான். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் தான் கதைக்களம். அவனது குடும்பம் சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் செல்கிறது. அப்போது அவர்கள் மிலிட்டரி அங்க்கிள், மார்ட்டின் தாத்தா, சர்தார்ஜி என பல அறிவுஜீவி நபர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் கண்ணில் மெலிந்த ,ஏழ்மை நிலையில் ஒரு சிறுவன் தென்படுகிறான். அவன் பெயர் தான் தோழர். அவன் தான் கதாநாயகனும். அவன் குழந்தையாக இருந்தபோது பெற்றோர்களிடமிருந்து கயவர்களால் திருடப் பட்டவன். அந்த ரயில் தான் அவனுக்கு இருப்பிடமே. அங்கே இருக்கும் டி.டி.ஆருக்கும் பயணிகள் சிலருக்கும் ஏதாவது உதவிகளைச் செய்து கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவன். கொஞ்ச நேரத்திலேயே ராகுல்ஜி குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் தோழர் நண்பனாகி விடுகிறான். அப்போது தான் அந்த டிடிஆர் இவனைக் கொடுமைப்படுத்துவதையும் ,அடிமை போல வேலை வாங்குவதையும் சொல்லி அழுகிறான். அப்போது அவனை மீட்க ராகுல்ஜி யின் அப்பா டிடிஆரிடம் பேசியபோது அவன் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தோழர் செஸ் ஆட்டத்தில் தன்னை ஜெயித்துவிட்டால் அவனை விட்டுவிடுவதாகச் சொல்கிறான். ஆனால் தோழருக்கு செஸ் விளையாட்டு பற்றி கொஞ்சமும் தெரியாது. சவாலை ஏற்ற ராகுல்ஜியின் அப்பா தோழருக்கு செஸ் கற்றுக் கொடுக்கிறார். இவர்களே எதிர்பாரா விதமாக தோழர் செஸ் ஆட்டத்தை படக்கென்று கற்றுக்கொண்டு ஜாம்பவான் போல விளையாடத் தொடங்குகிறான். கடைசியில் டிடிஆரை வீழ்த்தியும் விடுகிறான். இதுதான் கதைச் சுருக்கம்.
இதில் எங்கேயா சதுரங்கத்தின் வரலாறு வருது, கொல்லப் போறேன் என நீங்கள் கோபப்படுவது புரிகிறது :) . இவர்களின் உரையாடல்களுக்கு நடுவே தான் மிலிட்டரி அங்க்கிள், மார்ட்டின் தாத்தா, ராகுல்ஜியின் அப்பா எல்லோருமே செஸ்ஸின் வரலாறு, புத்தகங்கள் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்களின் உரையாடல்கள் நம்மை பிரம்மிக்க வைக்கும். உதாரணமாக செஸ் ஆட்டத்தில் ராணிக்கு ஏன் அவ்வளவு பலம். செஸ் ஆட்டம் இந்தியாவில் தோன்றி சைனா, அரேபியாவுக்குப் பரவிய நாட்களில் சதுரங்கத்தில் ராணிக்கு இவ்வளவு பலம் கிடையாது. மந்திரி தான் பலம் வாய்ந்தவராக இருந்தார். இப்போது நாம் விளையாடும் சதுரங்க விதிகள் ஐரோப்பாவில் மாற்றப் பட்டவைதான். ஐரோப்பாவில் இங்கிலாந்து போன்ற அநேக நாடுகளில் ராணிகள் தான் அதிகாரங்கள் நிறைந்தவராக இருந்திருக்கின்றனர் . (எலிசபெத் ராணி போல). அதனால் ராணி மீது கொண்ட பற்றின் காரணமாக சதுரங்க ஆட்டத்திலும் ராணியை பலம் வாய்ந்தவராக விதிகளை மாற்றியிருக்கின்றனர். இதைப் போலவே நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் புத்தகத்தில் உள்ளன,
பெற்றோர்கள் சிறுவர்களுக்கு கதைப் புத்தகங்கள், வரலாற்றுப் புத்தகங்கள் வாங்கித் தராதது பற்றிச் சொல்லியும் நடராஜன் பெற்றோர்களின் தலையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். இப்போதைய பெற்றோர்கள் சிறுவர்களுக்கு புத்தகம் வாங்கித் தராமல் இல்லை. ஆனால் அவர்கள் வாங்கித்தரும் புத்த்கங்கள் “உங்கள் மகன் விஞ்ஞானியாக வேண்டுமா?” “உங்கள் மகன் டாக்டரகா வேண்டுமா?” போன்றவை தான். தன் மகன் பெரிய வேலையில் சேர்ந்து, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாங்கித் தரப் படு[பவை. கதைப் புத்தகங்கள் படித்தால் தன் மகன் ஒழுங்காகப் படிக்க மாட்டானோ எனப் பயந்து பெற்றோர்கள் சிறுவர்களை நூலகங்கள் பக்கம் அனுமதிப்பதேயில்லை. இதைப் பற்றி புத்தகத்தில் நடராஜன் விரிவாகப் பேசியிருக்கிறார்.
சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது என இந்த நூலைச் சொல்வேன். முக்கியமாக பெற்றோர்கள்.
-அசோக் ராஜ்

அருமை நண்பா!!!
ReplyDeleteஅருமை நண்பா!!!
ReplyDeleteஅருமை, புத்தகம் எங்கே கிடைக்கும்?

ReplyDeleteநல்ல பதிவு......!
ReplyDelete