பம்பரக் கட்டை
வட்டத்தினுள் மட்டீர் மட்டீர் என்று குத்தி கட்டைகள் வெளியேறும் அந்தச் சத்தமும், கோஸ் கோஸ் என்று அத்தனை பேரும் ஆர்ப்பரிக்கும் ஓசையும் இன்னமும் துல்லியமாக் கேட்கிறது :) .பம்பரம் எப்போதுமே ஒரு சீசன் விளையாட்டாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது சாதாரண பள்ளி நாட்களிலோ, வார இறுதி விடுமுறைகளிலோ என ஓரிரு நாட்களுக்கு மட்டுமாக அதை நாங்கள் விளையாடியதே இல்லை. ஆண்டுத் தேர்வு விடுமுறைகளின் பகல் நேரங்கள் தான் எப்போதுமே இதற்குச் சரியானது. ஆனால் ஒரு முறை கூட பம்பரம் விளையாடுவோம் என எல்லோரும் ஒன்றுகூடி முடுவெடுத்தெல்லாம் ஆடியதே இல்லை. It happens. யாரவது ஒருவன் ஏதோ ஒரு யோசனையில் பம்பரம் ஒன்றை வாங்கி தெருவில் சுற்றிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்த இன்னொருவன் உடனே ”எங்கடா வாங்கினே”. கடையைக் கேட்டு விசாரித்து அவன் வாங்கி அவனும் பொழுதுபோகாமல் சுற்றுவான். இப்படியே ஒவ்வொருவராக வாங்கி எல்லோரும் ஆட்டத்தில் சேர மூன்று நாட்களாவது ஆகும். அது அப்படியே அந்த விடுமுறைக் காலம் முழுவதுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் அன்றைக்கு யாராவது குறி வைத்து செய்யப் படுவார்கள். அதெல்லாம் ரே...