Posts

Showing posts from 2022

என்ன செய்தேன் இவ்வருடம்

Image
  பணி உயர்வுடன் கூடிய நல்ல வேலை, நல்ல நிறுவனம் என மகிழ்ச்சியுடன் தொடங்கியது  ஆண்டு. அதில் முழுமையாக திளைப்பதற்குள் மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாம் பனால். கொஞ்சமும் எதிர்பாராதா ஒரு பிரிவு . அதற்கு சற்றும் தயாராக இருந்திராத என்னை அது பிய்த்துப் போட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல், நேரம் அனைத்தையும் வருத்தப் படுவதற்கென்றே ஒதுக்கிவிட்டு வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள். கசப்பும், வெறுப்பும் ,வன்மமும் மனதில் நிறைந்து விட்ட நாட்கள்.   இன்றைக்கு நினைத்துப் பார்க்கிற போது எப்படி அதையெல்லாம் கடந்து வந்தேன் என ஆச்சரியமாகத்தானிருக்கிறது.  நாம் எத்தனை பூஞ்சையாக மாய உலகில் வாழ்ந்து என்றும் அதுதான் உணர்த்தியது .  ஆனால் இப்பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதிலிருந்து மீண்டு வர எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், இன்னும் வேகமாக அதற்குள் தள்ளியது. நதியில் அடித்துச் செல்லப்படுகிற சருகுபோல, வாழ்க்கைக்கு நம்மை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி நிற்பதே அதற்கான தீர்வு என உணர்ந்து கொள்வதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஹூம் .என்னை நானே கொஞ்சம் மன்னித்துக் கொண்டேன், அவர்களையும். அச்சமயங்களில் ...

ஒரு Fan Boy ன் பிறந்தநாள் வாழ்த்து

Image
  கல்லூரி இறுதியாண்டில் தான் ,பாடத்துக்கு வெளியே தமிழில் கொஞ்சம் வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். எழுத்தாளரைப் பற்றியெல்லாம் தெரிந்து புத்தகத்தை தேர்ந்தெடுக்கத் தெரியாது. ஆனால் கிழக்குப் பதிப்பகமென்றால் சிறிதும் யோசனையின்றி எடுத்துக் கொள்வேன். அதற்கு முன் சொக்கனை இடைவிடாது படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம் :) . குறிப்பாக வாழ்க்கை வரலாற்று நூல்கள். அப்படித்தான் திருச்சி கார்முகில் நிலையத்தில் ஒருநாள் ,ஹிட்லரின் படத்தோடு கூடிய கிழக்குப் பதிப்பக நூலை பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி கல்லூரி விடுதிக்கு வாங்கிக் கொண்டு போய் வாசிக்கத் தொடங்கினேன். வழக்கமான வாழ்க்கை வரலாறு போல் இதுவும் ஒன்று என படிக்க ஆரம்பித்தவனுக்கு எதிர்பாரத ஆச்சரியம். முதல் அத்தியாயமே ஹிட்லரின் மரணத்தில் தொடங்கியது. பிறந்த நாளன்று காலையில் எழுந்த ஹிட்லர் கொஞ்சம் கொஞ்சமாக அன்று மரணத்துக்காக தயாராவதைப் பற்றியது. அதுவரை நான் வாசித்திராத ஒரு மொழிநடை. அந்த உணர்வை  இன்றைக்குமே சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. எவ்வளவு நேரம் போனது, சாப்பிட்டேனா இல்லையா எதுவும் தெரியவில்லை. முழு புத்தகத்தையும் வாசித்து முடித்த ...

கைவிடப்படுதல்

Image
தேநீர் கடையில் அமர்ந்து கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவனுக்கு அருகில் ஒரு நிழல் விழுந்தது, தோள்களில் ஒரு கைபட்டதும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் நீண்ட மேலங்கி, அழுக்கடைந்த தாடி நெருப்பெரிகிற கண்கள் "இயேசு கிறுஸ்துவா ?" என்றான் ஆம் நானே தான், அப்படியென்ன உனக்கு நடந்துவிட்டது, ஒரு தேநீர் குடிக்கலாமா என்றார் கைவிடப்பட்டவர்களின் துயரம் உன்னைப் போன்ற கடவுள்களுக்கு தெரிந்துவிடப் போகிறதா என்ன என்னைக் கொஞ்சம் தனிமையில் விடுங்களேன் மெலிதாகச் சிரித்துக் கொண்ட இயேசு சொன்னார் கடவுளாவதற்கு முன்பு நானும் ஒரு மனித குமாரன் என்பதை மறந்துவிட்டாயா, நான் நேற்று தான் என் தேவனால் கைவிடப்பட்டேன், சிலுவையில் அறையப்பட்டேன், தாகமாயிருக்கிறதென பரிதவித்து அழுதேன், இன்றைக்கு நீ அழுகிறாய், நாளையும் பலர் அழப் போகிறார்கள் என் தோழனே, கைவிடப்படுதல் என்பது யுகங்கள்தோறும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது கைவிட்டப்பட்ட ஆயிரமாயிரம் கரங்கள் , காற்றில் தன் பிடிமானங்களை தேடி அலைகின்றன திரும்பவும் பற்றிக் கொள்ள கைகள் கிடைத்துவிடுமென பரிதவிக்கின்றன ஆனால் நம் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகிறதா என்ன ஆனாலும் எ...