Posts

Showing posts from 2018

கடவுச் சொல்

ரயில்வே பாதையை ஒட்டிய சாலையில்  மெல்ல நடந்து கொண்டிருந்தான் ஆனந்த். அவ்வப்போது அடிவயிற்றை லேசாகப் பிடித்துக் கொண்டு முனகினான். முந்தைய நாள் இரவு நண்பர்களுடன் குடித்துவிட்டு எழுந்த நடக்கவே முடியாமல் எதையும் சாப்பிடாமல்  அப்படியே படுத்துக் கொண்டதால் வயிறு லேசான எரிச்சலுடன் அவ்வப்போது உள்ளே இழுத்து வலி உண்டாக்கியது. சட்டைப் பையிலிருந்து செல்ஃபோனை எடுத்துப் பார்த்த போது  நேற்று அலுவலகம் வராதது ஏன் என்று மேனேஜரிடமிருந்து குருஞ்செய்தியும், அவனுடைய அம்மாவிடமிருந்து ஆறு மிஸ்டு கால்களும்  வந்திருந்தன.எதற்காக இத்தனை முறை அழைக்கிறாள்  என லேசாக எரிச்சலாகத் தொடங்கிய நொடியில் , ரயில் ஒன்று பெரும் சப்தத்துடன் அவனை ஒட்டிய தண்டவாளத்தில் வேகமாகச்  சென்றது. லேசாக அதில் பயந்திருந்தான். உலகமே அவனைப் பாடாய்ப்படுத்தவதாகத் தோன்றியது. அந்த இடத்திலேயே ஓவென்று கதறி அழ வேண்டும் போல இருந்தது.  எதற்காக அழ வேண்டும் என்று தான் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழ வேண்டும்.  ஃபோனை உள்ளே வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினான். வீட்டுக்கு உள்ளே நுழைந்த போது கடிகாரம் காலை 10 மணி எனக் காட்...

பம்பரக் கட்டை

Image
வட்டத்தினுள் மட்டீர் மட்டீர் என்று குத்தி கட்டைகள் வெளியேறும் அந்தச் சத்தமும், கோஸ் கோஸ் என்று அத்தனை பேரும் ஆர்ப்பரிக்கும் ஓசையும் இன்னமும் துல்லியமாக் கேட்கிறது :) .பம்பரம் எப்போதுமே ஒரு சீசன் விளையாட்டாகத் தான் இருந்திருக்கிறது. அதாவது சாதாரண பள்ளி நாட்களிலோ, வார இறுதி விடுமுறைகளிலோ என ஓரிரு நாட்களுக்கு மட்டுமாக அதை நாங்கள் விளையாடியதே இல்லை. ஆண்டுத் தேர்வு விடுமுறைகளின் பகல் நேரங்கள் தான் எப்போதுமே இதற்குச் சரியானது. ஆனால் ஒரு முறை கூட பம்பரம் விளையாடுவோம் என எல்லோரும் ஒன்றுகூடி முடுவெடுத்தெல்லாம் ஆடியதே இல்லை. It happens. யாரவது ஒருவன் ஏதோ ஒரு யோசனையில் பம்பரம் ஒன்றை வாங்கி தெருவில் சுற்றிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்த இன்னொருவன் உடனே ”எங்கடா வாங்கினே”. கடையைக் கேட்டு விசாரித்து அவன் வாங்கி அவனும் பொழுதுபோகாமல் சுற்றுவான். இப்படியே ஒவ்வொருவராக வாங்கி எல்லோரும் ஆட்டத்தில் சேர மூன்று நாட்களாவது ஆகும். அது அப்படியே அந்த விடுமுறைக் காலம் முழுவதுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் அன்றைக்கு யாராவது குறி வைத்து செய்யப் படுவார்கள். அதெல்லாம் ரே...
இன்று திடீரென பள்ளிக் காலத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய காட்சி ஒன்று துல்லியமாக நினைவில் வந்துபோனது . அதன் பின் நாங்கள் சிறுவயதில் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டாக மனதில் ஓடவிட்டுப் பார்த்தேன். அட. எத்தனை அற்புதமான காலங்கள். சுரீரென்ற வெயிலையும் சீக்கிரம் வரச் சொல்லி வீட்டில் விழுகிற திட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆடிய கிரிக்கெட்டும் , பம்பரமும் , கோலியும் , எறிபந்தும், கிட்டியும் ,இரவில் மட்டுமே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கிற கப்பைஸும், மாய்ந்து மாய்ந்து திண்ணையில் அமர்ந்து பேசிய பேய்க் கதைகளும், அண்டர்டேக்கர் கதைகளும், வாய்க்காலில் விழுந்த பந்தை யாரெடுப்பது என்ற பிரச்சனையும், நாங்கள் தெருத் தெருவாக பின் தொடர்ந்து சென்ற கோயில் யானைகளும், ஜனவரி பிப்ரவரியும், ரஸ்லிங் கார்டும், எங்களிடைய இருந்த அஜித், விஜய் ரசிகர் குழுக்களும், அதன் சண்டைகளும் , அடேங்கப்பா. நினைத்துப் பார்க்கையில் பெருமூச்சை வரச் செய்கிறது. . இதில் நிறைய விளையாட்டுகள் தெருவில் எங்கள் தலைமுறையோடு வழக்கொழிந்து விட்ட சோகக் கதையும் நடக்கத்தான் செய்தது. பதினைந்து பேராவது இருந்திருப்போம். இன்றைக்கு மிகச் சில...

அரங்கம்

பாராவின் பொலிக பொலிக படித்ததிலிருந்தே திருவரங்கம் போய் ராமனுஜரைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.  இறுதியில் சென்றவாரம் அவ்வாசை நடந்தது. உண்மையில் எனக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. ஆனால் ராமானுஜரின் அந்த அர்ப்பணிப்பு தான் அவரை மிகவும் நேசிக்க வைத்தது. எப்படியான மனிதர். தனது முப்பதாவது வயதில் திருவரங்கத்திற்கு வந்ததிலிருந்து மரணித்த நூற்றியிருபதாவது வயது வரை அரங்கனை மட்டுமே நினைவில் கொண்டு அவருக்காகவே வாழ்ந்திருக்கிறார். அசுரத்தனமான பக்தி. முழுமையாக தன்னை அர்ப்பணித்தல் என்பது அதுதான்.   ஞாயிறு காலையில் நானும் நண்பன் மணியும் திருச்சி செல்லும் ரயிலைப் பிடித்தோம். எனக்கு ராமனுஜரை அறிமுகப் படுத்தியதே அவன் தான். ரயில் திண்டுக்கல் போய்ச்சேரும் வரை எந்தக் குழப்பமும் இல்லை. அங்கே போனவுடன் ரயிலை இரண்டாகப் பிரிப்ப்பார்கள். ஒரு பாதி ஈரோட்டுக்கும் இன்னொன்று திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கும். பிரச்சனை அதுவல்ல. எந்தப் பகுதி எங்கே போகுமென்பது எவருக்கும் உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் அதே ரயிலில் போனபோது பின் பகுதி ரயில் திருச்சிக்கு போனது. அத...